Published : 13 Nov 2025 07:24 AM
Last Updated : 13 Nov 2025 07:24 AM
சென்னை: ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவ. 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தையொட்டி லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழங்கும் `இந்து தமிழ் திசை - குழந்தைகள் தின சிறப்புப் போட்டிகள்' நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை வேலம்மாள் போதி கல்வி காம்பஸும் இணைந்து நடத்துகிறது.
பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் வகையிலான இப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடைபெறுகின்றன. 1, 2, 3-ம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் ‘நான் நேருவானால்..?’ எனும் தலைப்பில் 40 முதல் 50 விநாடிகள் வரை பேசி, அந்த வீடியோவை 9384886990 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் ‘இந்து தமிழ் திசை’ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் குழந்தைகள் ‘நேருவும் குழந்தைகளும்…’ எனும் தலைப்பில் 100 முதல் 150 வார்த்தைகளுக்குள் கட்டுரையாக எழுதி, அதை ஸ்கேன் செய்து mariyappan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். சிறப்பான கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்படும்.
இந்தப் போட்டிகளுக்கு வீடியோ மற்றும் கட்டுரைகளை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறப்பான வீடியோ மற்றும் கட்டுரைகளுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT