Published : 23 Sep 2025 06:40 AM
Last Updated : 23 Sep 2025 06:40 AM
சென்னை: இளைய தலைமுறை மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தையும், புத்தக வாசிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகை எஸ்எஸ்எல்எஃப் கல்வி அறக்கட்டளை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பை நேசிப்போம் எனும் நிகழ்வு சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நாளை (செப்.24, புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
தனி மனிதனின் வளர்ச்சிக்கு புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைய தலைமுறை மாணவர்கள் புத்தக வாசிப்பில் பெரிதும் ஆர்வமின்றி இருக்கின்றனர். புத்தக வாசிப்பின் வழியாகத்தான் புதிய உலகை காணமுடியும், புதிய சிந்தனைகள் பிறக்கும்.
மாணவர்களிடம் புத்தக வாசிப்பு.. புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில், மத்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் ஐடிஏஎஸ், எஸ்எஸ்எல்எஃப் கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஜி.சக்திவேல், கல்வியாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் ஆகியோர் பங்கேற்று, கருத்துரையாற்ற உள்ளனர். புத்தக வாசிப்பின் அவசியத்தை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT