Published : 17 Sep 2025 08:09 PM
Last Updated : 17 Sep 2025 08:09 PM
சென்னை: திருநெல்வேலியில் 1924ம் ஆண் டில் முதல் கடையை தொடங்கிய ஆர்எம்கேவி நிறுவனம் நேர்த்தியான பட்டுப் புடவைகளால் நூறு ஆண்டை கடந்து தற்போது 101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு 15 புதிய பட்டுப் புடவைகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வரவுள்ள விழாக்கால கொண் டாட்டத்துக்காக உருவாக்கப்படும் இந்த சிறப்பு படைப்புகள் ஜப் பானிய கலை மற்றும் இந்திய கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் விவரம் வருமாறு: ஷாஷிகோ ரிவர்சிபிள் பட்டுப்புடவை. இது ஒரு புறம் பச்சை வண்ணமும் மறுபுறம் அந் திவான செந்நிறமும் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான புடவையாகும். ஜப்பான் கோர்வை புடவை. இது ஜப் பானிய மோட்டிப்கள் ஹனாபிஷி பூக்களின் கொடிகள் வடிவங்கள் அடையாளங்களுடன் கலை வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. மவுண்ட் ஃபுஜி சேலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நேச்சுரல் ஃபீச் கிரேடி யன்ட் சப்பான் மரம் மற்றும் மரப்பிசின்களால் உருவாக்கப்பட்ட தாகும். மேலும் மோக்கா மவுஸ், வான் கோ லினோ, ராசலீலா பட்டுப் புடவை, இயற்கை வண்ண செவ்வந்தி பூ, டபுளா லினோ வர்ணா, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியண்ட் வர்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோர்வை, குமோ கோர்வை என மொத்தம் 15 புதிய பட்டு சேலைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.
நூற்றாண்டு கால ஆரெம் கேவி பட்டுப் பயணத்தில் தனித்துவ படைப்புகளாக விளங்கிய ஹம்ச தமயந்தி, சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும்.
சென்னையில் தி.நகர், வடபழனி, வேளச்சேரி மற்றும் திருநெல்வேலி, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய கிளைகளோடு இயங்கி வருகிறது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் மாடர்ன் ஐஸ்டு நிமிடெட் ஹேண்ட்லூம் எனும் புதிய தறியை வடிவமைத்து நெசவாளர்களுக்கு அர்ப்பணித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT