Published : 05 Sep 2025 06:43 AM
Last Updated : 05 Sep 2025 06:43 AM

​வாசிப்​​பின்​ அவசி​யத்​தை வலி​யுறுத்​​தும்​ வகை​யில்​ ‘இந்​து தமிழ்​ திசை’ வாசிப்​​புத்​ திரு​விழா: ​காஞ்​​சிபுரத்​​தில்​ ​நாளை ​மாலை நடை​பெறுகிறது

சென்​னை: வாசிப்​​பின்​ அவசி​யத்​தை வலி​யுறுத்​​தும்​ வகை​யில்​, வாசிப்​​புத்​ திரு​விழா எனும்​ நிகழ்​வை ‘இந்​து தமிழ்​ திசை’ முன்னெடுத்​​துள்​​ளதுபுத்​தக வாசிப்​பை இளைய தலை​முறை​யினருடன்​ இணைந்​து கொண்​​​டாடும்​ இந்​​நிகழ்​வு ​காஞ்​​சிபுரம்​ ​காமராஜர்​ ​சாலை​யில்​ உள்​ள தொண்​டை மண்​டல ஆதி சைவ வேளாளர்​ சமு​​தாயக்​ கூட அரங்​​கில்​ ​நாளை (செப்​. 6) ​மாலை 3.30 மணிக்​கு நடை​பெற உள்​​ளது.

இந்​​நிகழ்​​வை, ஈவா ஸ்​​டா​லின்​ ஐஏஎஸ்​ அ​காட​மி, ஓலோ கிட்​​ஸ்​, காஞ்​​சிபுரம்​ எஸ்​​.எம்​​.சில்​க்​​ஸ்​, எஸ்​​ஆர்​​எம்​ குளோபல்​ ஹாஸ்​​ பிடல்ஸ், ​காஞ்​​சிபுரம்​ பீட்​​டாமவுன்​ட்​ லிட்​​டே​ரா ஜீ ஸ்​கூல்​, ​காஞ்​சிவாணி வித்​​​யால​யா ஆகியவை இணைந்​து நடத்​​துகின்​​றன. ஒவ்​​வொரு மனிதனின்​ அறிவு வளர்​ச்​​சி, சுய சிந்​​தனைக்​கு வாசிப்​பு மிக​வும்​ அவசி​யம்​. நம்​​முடைய வரலாற்​​றை​யும்​, பண்​​​பாட்​​டை​யும்​ வாசிப்​பே நமக்​கு வெளிச்​​சமிட்​​டுக்​ ​காட்​​டு​கிறது. நவீன அறி​வியல்​, தொழில்​​நுட்​​பம்​ தற்​​போது நம்​ உள்​​ளங்​​கைக்​​குள்​ உலகத்​தை கொண்​டு வந்​​து சேர்​த்​​திருக்​​கிறது.

ஆனாலும்​, காட்​சி ஊடகங்​​கள்​ நமக்​கு ஒற்​​றைத்​​தன்​​மை​​யான கருத்​​துகளையே அளிக்​​கின்​​றன. சமூக ஊடகங்​​களின்​ வழியே நொடிக்​​கொரு செய்​தி நம்​ ​பார்​​வைக்​கு வந்​​​தா​லும்​, செய்​​தி​யின்​ உண்​​மைத்​ தன்​​மையை அச்​சு ஊடகங்​​களின்​ வழி​​யாக மட்​​டுமே நம்​​​மால்​ உறு​தி​செய்​ய முடிகிறது. ​

நாளிதழ்​ வாசிப்​​பு, புத்​தக வாசிப்​பு என வாசிப்​பை சுவாசிக்​​கும்​ சமூகம்​​​தான்​ அடுத்​த தலை​முறைக்​கு வழி​​காட்​​டி​​யாகத்​ திகழும்​. புத்​தக வாசிப்​பு என்​​பது தனிப்​​பட்​ட முறை​யிலும்​, சமூகத்​​துக்​​கும்​ நன்​மை அளிக்​​கக்​​கூடிய செயல்​. வாசிப்​​பின்​ வழி அவர​வர்​ கற்​​பனைக்​​கும்​ ஆற்​​றலுக்​​கும்​ ஏற்​ப பன்​​முக​​மான கருத்​​துகள்​ உரு​வாகும்​.

வெ.இறையன்​பு

வாசிப்​​பின்​ சிறப்​பை இளைய தலை​முறை​யினருடன்​ சேர்​ந்​து கொண்​​​டாடும்​ இவ்​​விழா​வில்​ தமிழக அரசின்​ முன்​​னாள்​ தலை​மைச்​ செய​லா​ள​ரும்​, எழுத்​​​தாள​ரு​​மான வெ.இறையன்​​பு, ​காஞ்​​சிபுரம்​ ​மாவட்​ட ஆட்​​சி​யர்​ கலைச்​​செல்​வி மோகன்​ ஆகியோர்​ பங்​​கேற்​​று, வாசிப்​​பின்​ அவசி​யம்​ குறித்​து உரை​​யாற்​​றுகின்​​றனர்​. இந்​த நிகழ்​​வில்​ பங்​​கேற்​​பவர்​​கள்​ அனை​வரும்​ பயனடை​யும்​ வகை​யில்​, சிறப்​​புத்​ தள்​​ளு​படி​யில்​ புத்​தக விற்​​பனை​யும்​ இடம்​​பெறவுள்​​ளது.

கலைச்​​செல்​வி மோகன்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x