Published : 02 Sep 2025 07:09 PM
Last Updated : 02 Sep 2025 07:09 PM

லைவ் பார் யூ சார்பில் செப்.14 முதல் 17 வரை சென்னையில் இசை, நடன திருவிழா

சென்னை: செப்​டம்​பர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்​னை​யில் இசை, நடன திரு​விழா நடை​பெற உள்​ளது. லைவ் பார் யூ சார்​பில் சென்னை எழும்​பூர் மியூசிக் தியேட்​டரில் செப்​டம்​பர் 14 முதல் 17-ம் தேதி வரை “லைவ் பார் யூ ஸ்கையர்​ஸ்​ரஸ் ஜோதிர்​கமயா சீரிஸ்” இசை, நடன திரு​விழா நடை​பெற உள்​ளது.

தின​மும் மாலை 3 முதல் இரவு 8.30 மணி வரை மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களுக்கிடையே ஒலிக்கும் மயக்கும் ஒளியுடன் நிகழ்ச்​சிகள் நடை​பெறும். கர்​னாடக இசை உலகின் இரட்​டையர்​கள் ரஞ்​சனி, காயத்ரி சகோ​தரி​களின் சிறப்பு இசைக் கச்​சேரி இடம் பெறுகிறது. கர்​னாடக இசைக் கலைஞர் சிக்​கில் குருச்​சரண், பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநி​வாஸன் இணைந்து சிறப்பு கச்​சேரியை நடத்த உள்​ளனர்.

இளம் இசைக் கலைஞர் ராமகிருஷ்ண மூர்த்​தி​யின் கர்​நாடக இசைக் கச்​சேரி நிகழ்ச்​சியை அலங்​கரிக்க உள்​ளது. மேலும் அனிதா குஹா பரதஞ்​சலி குழு​வின் சார்​பில் சிறப்பு பரத​நாட்​டிய நிகழ்ச்சி அரங்​கேற்​றம் செய்​யப்பட உள்​ளது. இவர்​கள் தவிர பிரபல இசைக் கலைஞர்​கள், நடன கலைஞர்​களின் 8 சிறப்பு கலை நிகழ்ச்​சிகளும் இடம்​பெற உள்​ளன.

செப்.14 முதல் 17 வரை ஒவ்​வொரு நாள் மாலைப் பொழுதை​யும் இசை, நடனம், கதை சொல்​லுதல் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் அலங்​கரிக்க உள்​ளன. மனதை மயக்​கும் கர்​னாடக இசை ராகங்​கள் முதல் பரவச​மாக்​கும் பரத நாட்​டி​யம் வரை இடம்​பெறும் ஜோதிர்​கமயா சீரிஸின் பங்​கு​தா​ர​ராக இந்து தமிழ் திசை இணைந்​திருக்​கிறது.

டிக்​கெட் முன்​ப​திவுக்கு: https://mdnd.in/SeasonTickets/OrganizerLandingPage?ci=101&r_id=29790, https://kynhood.com/eventcategory/Jyotirgamaya
99405 09548 (பிர​காஷ்) என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x