Published : 05 Aug 2025 12:44 AM
Last Updated : 05 Aug 2025 12:44 AM

‘சிங்கா 60’ ‘ஸ்கிரீன் அண்ட் சிட்டி’ நிகழ்ச்சியில் கமல் - ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் இன்று திரையிடல்

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத்​திரு​விழா​வில்,‘ஸ்கிரீன் அண்ட் சிட்​டி’ சிறப்பு நிகழ்ச்​சி​யில், கமல்​ஹாசன், ரஜினி ​காந்த் நடித்த ‘நினைத்​தாலே இனிக்​கும்’ படம் இன்று திரை​யிடப்​படு​கிறது. இப்​படம் சிங்​கப்​பூரை மைய​மாகக் கொண்டு எடுக்​கப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலைத்​திரு​விழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. ஓவியக் கண்​காட்​சி, நாடகம், ஆவணப் படம், கலை, கலாச்​சா​ரம், குழு விவாதம், கலந்​துரை​யாடல், உணவுத் திரு​விழா என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இந்த திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கியது.

இதில் ஓவியக் கண்​காட்சி மட்​டும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடை​பெறும். இந்​தியா மற்​றும் சிங்​கப்​பூரைச் சேர்ந்த ஓவிய, சிற்​பக் கலைஞர்​களின் படைப்​பு​களை இக்கண்​காட்​சி​யில் பொது​மக்​கள் கண்​டு​களிக்​கலாம் ‘சிங்கா 60’ கலைத்​திரு​விழா​வின் 2-ம் நாள் நிகழ்ச்​சி​யாக ராஜா அண்​ணா​மலைபுரம் ராஜரத்​தினம் கலை​யரங்​கில், சிங்​கப்​பூரைச் சேர்ந்த அகம் தியேட்​டர் லேப்நாடகக் குழு​வின் ‘முச்​சந்​தி’ என்ற சமூக விழிப்​புணர்வு நாடகம் அரங்​கேற்​றம் செய்​யப்​பட்​டது. தொழில்​நுட்ப முன்​னேற்​றம் ஏற்​படுத்​தும் கலாச்​சார சிக்​கல்​களை கண்​முன்கொண்​டு​வந்து நிறுத்​திய இந்த நாடகத்தை பார்​வை​யாளர்​கள் உற்​சாக​மாகக் கண்டு ரசித்​தனர்.

‘சிங்கா 60’ விழா​வின் ஒரு பகு​தி​யாக தி.நகர் தியாக​ராய சாலை​யில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்​டலில் (ஸ்​கை) சிங்​கப்​பூர் உணவுத் திரு​விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இங்​கு, சிங்​கப்​பூர், மலாய், சீன உணவு​கள் கிடைக்​கும். இந்த உணவுத் திரு​விழா ஆக.10-ம் தேதி வரை நடை​பெறும்.

இந்​நிலை​யில், 4-ம் நாள் நிகழ்ச்​சி​யாக ‘ஸ்கிரீன் அண்ட் சிட்​டி’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ராயப்​பேட்டை எக்​ஸ்​பிரஸ் அவென்​யூ​வில் உள்ள பிவிஆர் தியேட்​டரில் நேற்று இரவு நடை​பெற்​றது. இதில், நடிகர்​கள் ஜெய், சிவா, நிதின் சத்​யா, பிரேம்ஜி உள்​ளிட்​டோர் நடித்த ‘சென்னை 600 028’ படம் திரை​யிடப்​பட்​டது. 2007-ம் ஆண்டு வெளி​யான இந்த படம், சென்னை ஸ்ட்​ரீட் கிரிக்​கெட் போட்​டியை அடிப்​படை​யாகக் கொண்​டது.

‘ஸ்கிரீன் அண்ட் சிட்​டி’ நிகழ்ச்சி: இன்​றும் (செவ்​வாய்) எக்​ஸ்​பிரஸ் அவென்யூ பிவிஆர் தியேட்​டரில் நடை​பெறுகிறது. இதில் கமல்​ஹாசன், ரஜினி​காந்த், ஜெயப்​பிரதா ஆகியோர் நடித்த ‘நினைத்​தாலே இனிக்​கும்’ படம் இரவு 7 மணிக்கு திரை​யிடப்​படுகிறது. இயக்​குநர் கே.​பாலச்​சந்​தர் இயக்கி1979-ம் ஆண்டு வெளிவந்த இந்த படம், சிங்​கப்​பூரை மைய​மாகக் கொண்ட படமாகும்.

ஆக.6-ம் தேதி (புதன்) காலை 11 மணிக்கு அடை​யாறு பத்​ம​நாபா நகர் 5-வது தெரு​வில் அமைந்​துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் ‘ஆசிய கலாச்​சா​ரங்​களில் ராமாயணம்’ என்ற தலைப்​பில் சிங்​கப்​பூரைச் சேர்ந்த இசை, நடனக் கலைஞர் அரவிந்த் குமார​சாமி கலை சொற்​பொழிவு ஆற்​றுகிறார். ‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​கு​ தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம் மற்​றும் டிபிஎஸ் வங்​கி​யும், துணைபங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்​ளன.

  • ‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
  • To Register Whatsapp type HI Singa60 at +91 9940699401
  • Email - singa50@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x