Last Updated : 03 Aug, 2025 09:18 AM

1  

Published : 03 Aug 2025 09:18 AM
Last Updated : 03 Aug 2025 09:18 AM

தமிழுக்கு மகுடம் சூட்டும் சிங்கை | ​​​​​​​சிங்கா 60: ஆக.1 முதல் ஆக.10 வரை

தமிழின் ஆட்சி: சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள நான்கு மொழிகளில் தமிழும் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வப் பேச்சு மொழியாகவும் கல்விக்கூடங்களில் பயிற்று மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதை அரசு கொள்கையாகவே வகுத்துள்ளது. சிங்கப்பூர் நாணயம், பணத்தாள்களில் ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகிய மொழி களோடு தமிழ் மொழியும் அச்சிடப்படுகிறது. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் தமிழ் மொழி அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் வரலாற்றில் தனித்துவமான இடம் தமிழுக்கு உண்டு!

துறைதோறும் தமிழ்: தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிங்கப்பூரில் பெரும்பாலான பொதுப் பள்ளிகளில் தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழும் ஒருபாடம். தாய்மொழி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பள்ளிகளில் தமிழைத் தாய்மொழிப் பாடப் பிரிவின் கீழ் சிங்கப்பூர் கல்வித் துறை அங்கீகரித்திருக் கிறது. சிங்கப்பூரில் அலுவலக ஆவணங்கள் தொடங்கிச் சாலைகள் வரை தமிழுக்கு இடமுண்டு.ரயில்நிலைய அறிவிப்புகளிலும் சாலைக் குறியீடு களிலும் தமிழ் இடம்பெற்றிருக்கிறது.

தமிழுக்கு அங்கீகாரம்: சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டம் 1963இல் நடைமுறைக்கு வந்தது. அப்போது சிங்கப்பூரின் பூர்வ குடியேற்ற இனத்தவரான சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள், பிற நாட்டவர் உள்ளிட்டோரை அங்கீகரிக்கும் வகையில் மலாய், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக முன்மொழியப்பட்டன. சிங்கப்பூரின் பண்பாட்டுப் பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் 1956இல் அனைத்துக் கட்சிகளின் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை முன்மொழிந்த சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் நான்கு ஆட்சி மொழிகளுக்கும் சம அளவிலான மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கப்பட்டுவருகிறது.

கடல் கடந்த கலாச்சாரம்: சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான - உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ், சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக இருப்பதற்குத்தமிழர்களின்பண்பாடும்முக்கியக்காரணம். சிங்கப்பூரின் கலை கலாச்சாரத்திலும் தமிழர்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அங்கே கொண்டாடப்படும் விழாக்கள் -பண்டிகைகள், கோயில்கள், செவ்வியல் கலைகள் போன்றவை தமிழ்ப் பண்பாட்டை மையமிட்டவை. பொங்கல், தீபாவளி, தைப்பூசம் போன்றவை விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. 'லிட்டில் இந்தியா' பகுதியில் இருக்கும் வீரமாகாளியம்மன் கோயிலும் 1827இல் நிறுவப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலும் தமிழ் நிலத்தின் பக்திக் கலாச்சாரத்தை சிங்கப்பூர் மண்ணில் வேர்பிடிக்க வைத்திருக்கின்றன. பரதநாட்டியமும் கர்னாடக இசையும் அழிந்துவிடாதபடி சிறந்த பயிற்றுநர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ்ப்பண்பாட்டின் -தமிழர்களின் இந்தப் பங்களிப்புதான் தமிழை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியிருக்கிறது.

சிங்கப்பூர் நிர்மாணத்தில் தமிழர்கள்: இந்தியாவும் சிங்கப்பூரும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்ததால் கட்டுமானத்துக் அகாகவும் பிற பணிகளுக்காகவும் சிங்கப்பூரில் இந்தியர்கள் குடியமர்த்தப்பட்டனர். 1819இல் பிரிட்டன் தனது வணிகத் துறைமுகத்தை சிங்கப்பூரில் அமைத்த பிறகு வணிகத்துக்கு. போர் வீரர்களாக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்து மக்கள் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களில் 90% தமிழர்கள். வணிகர்களும் பணப்பரிவர்த்தனை செய்கிறவர்களும் தமிழர்களாக இருந்தனர். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள் சிங்கப்பூரில் அலுவலகப் பணி, ஆசிரியப் பணி, நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு, தமிழர்களுக்கான சிறு காலனியை அமைத்தனர். 1860இல் 13,000 தமிழர்கள் சிங்கப்பூரில் இருந்தனர். 2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் இரண்டு லட்சத்தைத் தொடும் அளவுக்குத் தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. நூற்றாண்டு கடந்த தமிழர்களின் இருப்பும்கூட சிங்கப்பூரில் தமிழுக்கு அங்கீகாரம் தேடித் தந்திருக்கிறது.

ஏன் தமிழ்?- சிங்கப்பூர் மக்கள்தொகையில் தமிழ் இவர்களில் இலங்கைத் தமிழர்களும் அடக்கம். இருந்தபோதும் எப்படித் தமிழ் மட்டும் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளுள் ஒன்றானது என்கிற வியப்பு பலருக்கு ஏற்படக்கூடும். அதுதான் தமிழின் பெருமை. சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை முறையுடன் வேரூன்றிய மொழியாகத் தமிழ் இருக்கிறது. உலகில் தமிழை அதிகாரபூர்வ மொழியாகக் கொண்ட நாடுகளில் இந்தியா, இலங்கையைத் தொடர்ந்து மூன்றாம் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x