Published : 21 Jul 2025 08:50 AM
Last Updated : 21 Jul 2025 08:50 AM
சென்னை: `இந்து தமிழ் திசை' நாளிதழ் பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்புமிக்க பல நிகழ்வுகளை கள அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ என்கிற சிறப்பு நிகழ்வை சென்னையில் நடத்துகிறது.
இந்த சிறப்பு நிகழ்வு வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) அன்று சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஓட்டல் அரங்கில் மாலை 4 மணிக்கு ‘மியூச்சுவல் ஃபண்ட்: குறிக்கோளுடன் கூடிய முதலீடு’ எனும் தலைப்பின்கீழ் நடைபெறவுள்ளது.
அப்போது, பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது குறித்தும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபத்தை ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், சான்றிதழ் பெற்ற நிதித்திட்ட ஆய்வாளருமான பா.பத்மநாபன், சென்னை மிரே அசெட் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் இந்தியா (பி) நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் எஸ்.கோபிநாத் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயதினரும் பங்கேற்று பயன்பெறலாம். மாலை 4 மணிக்கு தேநீர் விருந்தோடு தொடங்கும் இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசம். இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/MFMANTRACHE என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT