Published : 21 Jul 2025 06:55 AM
Last Updated : 21 Jul 2025 06:55 AM

ராம்ராஜ் காட்டன் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடத்தப்படும் ‘அன்பாசிரியர்’ விருதுக்கான தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்கள்!

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘அன்பாசிரியர்’ தேர்வுக்கான இணையவழி நேர்காணலில் கலந்துகொண்ட நடுவர் குழுவினர்.

சென்னை: ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்​தும் ‘அன்​பாசிரியர் விருது’க்​கான இணை​ய​வழி நேர்காணலில் ஆசிரியர்​கள் ஆர்​வ​முடன் கலந்​து​ கொண்​டனர். மாணவர்​களுக்கு தனித்​து​வம்​ மிக்க கல்​வியை அளிப்​பதுடன், மாறு​பட்ட சிந்​தனை​யுடன் செயல்​பட்டு பள்​ளிக்கு பெருமை சேர்க்​கும் அர்ப்​பணிப்​புமிக்க அரசு, அரசு உதவிபெறும் மற்​றும் தனியார் பள்ளி ஆசிரியர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில் 2020 முதல் ஆண்​டு​தோறும் ‘அன்பாசிரியர்’ விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தொடர்ந்து 5-வது முறை​யாக ‘அன்​பாசிரியர்’ விருதுகளை ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனத்​துடன் சேர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க உள்​ளது. இந்​நிகழ்​வின் பங்​கு​தா​ரர்​களாக லட்​சுமி செராமிக்​ஸ், பொன்​வண்டு டிடர்​ஜென்ட் நிறு​வனங்​கள் இணைந்துள்ளன.

இந்த விருதுக்கு தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள 40 மாவட்​டங்​களில் இருந்து 549 ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்தனர். அவர்​களில் 160 பேர் நேர்​காணலுக்கு தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான இணை​ய​வழி நேர்​காணல் கடந்த 2 நாட்​களாக நடை​பெற்​றது. இதில் ஏராள​மான ஆசிரியர்​கள் பங்​கேற்​றனர்.

எத்​தி​ராஜ் கல்​லூரி பேராசிரியர் யு.என்​.ம​காலட்​சுமி, கல்​வி​யாளர் சாய் விஜயேந்​திரன், லயோலா கல்​லூரி பேராசிரியர் வி.சும​தி, அம்​பேத்​கர் அரசு கலைக் கல்​லூரி பேராசிரியர் ஜெபக்​கு​மார், ஓய்​வு​பெற்ற பேராசிரியர் அமல்​ராஜ், கல்​வி​யாளர் இளை​ய​ராஜா கண்​ணன், பேராசிரியர் சி.ஆர்​.மஞ்​சுளா, எஸ்​எஸ்ஏ மாவட்​டத் திட்ட உதவி ஒருங்​கிணைப்​பாளர்​(ஓய்​வு) வெ.மதி அழகன், எஸ்​ஆர்​எம் கல்​லூரி பேராசிரியர் பா.ஜெய்​கணேஷ் ஆகியோர் நடு​வர்​களாக செயல்​பட்​டனர்.

பேராசிரியர் பா.ஜெய்​கணேஷ்

கற்​பித்​தலில் புதிய உத்​தி​களைப் பயன்​படுத்​துதல், புத்தக வாசிப்​பு, மாணவர் நலன், பள்​ளி​யில் மாணவர் சேர்க்​கையை உயர்த்துதல், ஆரோக்​கிய மேம்​பாடு உள்​ளிட்ட அம்​சங்​களை முன்​வைத்து ஆசிரியர்​களிடம் கேள்வி​கள் முன்​வைக்​கப்​பட்​டன. மேலும், ஆசிரியர்​களின் தனிச் சிறப்​பு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.

இதுகுறித்து நடு​வர்​கள் சி.ஆர்​.மஞ்​சுளா, வெ.மதி அழகன் ஆகியோர் கூறும்​போது, “ஆசிரியர்​களே ஒரு சமூகம் வளர்ச்சி பெற முக்கியப் பங்​காற்​றுகின்​றனர். அவர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் விருது வழங்​கப்​படு​வது மகிழ்ச்சியளிக்​கிறது.

மாணவர்​களை நல்​வழிபடுத்​தி, கல்​வியை வழங்க வேண்​டியது ஆசிரியர்​களின் கடமை​யாகும். ஆசிரியர்​கள் பலர் கற்​பித்​தலை தாண்​டி, பல்​வேறு தனிச் செயல்​பாடு​களை மேற்​கொண்​டு​வரு​வது பாராட்​டுக்​குரியது. இத்​தகு விருதுகள் ஆசிரியர்​கள் தங்​களை புதுப்​பித்​துக்​கொள்ள வழி​வகுக்​கும். பாடங்​கள் கற்​பித்​தலை​விட, தனித்​திறன், சமூகநல பங்​களிப்​பு​கள் உள்​ளிட்ட அம்​சங்​களை முன்​வைத்​து, விருதுக்கு தகு​தி​யான ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள்” என்​றனர்.

நேர்​காணலில் பங்​கேற்ற ஆசிரியர்​கள் மாசிலாமணி (கோவை), நித்யா ராஜசேகர் (புதுச்​சேரி), நான்சி மேரி தங்​கம் (நெல்​லை), செந்​தில்​கு​மார் (சென்​னை) ஆகியோர் கூறும்​போது, “நேர்​காணலில் பங்​கேற்​றது சிறந்த அனுபவ​மாக இருந்​தது. இந்த நிகழ்​வுக்கு பின்​னர், ஆசிரிய​ராக இன்​னும் பல்​வேறு அம்​சங்​களை கற்​று, அவற்​றைச் செயல்​படுத்த வேண்​டுமென புரிந்​து​கொண்​டோம். விருதுக்​கான தேர்வு நிலைகள் நம்​பகத்​தன்​மை​யுட​னும், திருப்​தி​கர​மாக​வும் இருக்​கின்​றன.

இந்த விருது மற்ற ஆசிரியர்​களுக்​கும் ஊக்​கமளிக்​கும். இந்த வாய்ப்பை நல்​கிய ‘இந்து தமிழ் திசை’க்கு நன்​றிகள்​”என்​றனர்.
நேர்​காணல் முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 40 ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ‘அன்பாசிரியர்’ விருது வழங்​கப்பட உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x