Last Updated : 14 Jun, 2025 01:56 PM

 

Published : 14 Jun 2025 01:56 PM
Last Updated : 14 Jun 2025 01:56 PM

மதுரையில் ஜூன் 22-ல் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி!

சென்னை: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள தியாகராசர் கல்லூரி அரங்கில் வரும் ஜூன் 22 (ஞாயிறு) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

V P Jayaseelan IAS
V P Jayaseelan IAS

இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஐஏஎஸ்., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்கவுரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

CHITRAVIJAYAN ias

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இந்த https://www.htamil.org/MDU2025 லிங்கில் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, பதிவு செய்துகொண்டு பங்கேற்று பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x