Published : 23 Feb 2025 10:11 AM
Last Updated : 23 Feb 2025 10:11 AM

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ - 2025 | மார்ச் 2-ல் மதுரை மண்டலப் போட்டிகள்

சென்னை: எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா சொல்!’ - 2025 மாபெரும் பேச்சுப் போட்டி மதுரை மண்டலப் போட்டிகள் வரும் ஞாயிறன்று (மார்ச். 2) நடைபெறுகிறது

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் சார்பில் ‘சொல் தமிழா! சொல்!’ 2025 எனும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஆறாம் கட்டமாக மதுரை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான மதுரை மண்டலப் போட்டி வரும் ஞாயிறன்று (மார்ச். 2) காலை 9 மணிக்கு மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகேயுள்ள தியாகராசர் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும் பங்கேற்கலாம். 18 முதல் 25 வயது வரையுள்ள மாணவ - மாணவியர்கள் பங்கேற்க முடியும்.

மாநில அளவிலான போட்டி ஏப்ரல் 6-ஆம் தேதியன்று முற்பகலிலும், அன்று மாலையே பரிசளிப்பு விழாவும் நடைபெறும். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

மாநில அளவில் முதல் பரிசாக ரூ.5 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.2 இலட்சமும் வழங்கப்படும். இப்போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக ரூ. 40 இலட்சம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் பிரிண்ட் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், மீடியா பார்ட்னராக புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் தொலைக்காட்சிகளும் இணைந்துள்ளன.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் https://forms.gle/5v4Kw6mimCDa3fdN7 அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x