Published : 19 Jan 2025 09:10 AM
Last Updated : 19 Jan 2025 09:10 AM

ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ விநாடி வினா: பதிவு செய்ய ஜனவரி 22-ம் தேதி வரை காலநீட்டிப்பு

சென்னை: ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL AVIATION ஆகியவை இணைந்து வழங்குகின்றன. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, பதிவு செய்து கொள்ளும் கடைசி தேதி வரும் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமானத் துறை விழிப்புணர்வு: பள்ளி மாணவர்களிடையே விமானத் துறை குறித்த ஆர்வத்தையும், அறிவியல் விழிப்புணர்வையும் தூண்டும் வகையில் நடைபெறவுள்ள இந்த அறிவியல் விநாடி-வினா நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த விநாடி-வினா நிகழ்வுக்கான முதல்கட்டப் போட்டி ஆன்லைன் வழியாகவும், இரண்டாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்வுகள் நேரிலும் நடைபெறும்.

முதல் பரிசு ரூ.25 ஆயிரம்: இறுதிப் போட்டிக்கு தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் ஹெலிகாப்டரை அருகில் சென்று பார்ப்பதற்கும், அதில் பறப்பதற்குமான வாய்ப்பு வழங்கப்படும். இந்த விநாடி-வினா நிகழ்வில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த விநாடி-வினா நிகழ்வின் க்விஸ் பார்ட்னராக X QUIZ IT இணைந்துள்ளது.

‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ விநாடி-வினா நிகழ்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/VE என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து. வரும் 22-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x