Published : 27 Feb 2022 03:41 PM
Last Updated : 27 Feb 2022 03:41 PM
சென்னை.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் கடந்த பிப் 15 முதல் தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இரண்டு பகுதிகள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் மூன்றாம் பகுதி நாளை (பிப்.28) முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
வாரம் -3 தனிநபர் சுத்தம்:
பிப்ரவரி 28, திங்கள். எட்டாம் பகுதியில், ஆரோக்கியமாக சாப்பிடுவது, சுகாதாரமான உணவு.
மார்ச் 02, புதன். ஒன்பதாம் பகுதியில், வாய் தூய்மை, குளித்தல்.
மார்ச் 04, வெள்ளி. பத்தாம் பகுதியில், கை கழுவுதலின் முக்கியம்,கை கழுவுதலின் வழிமுறை.
இந்த சுகாதார நிகழ்வில் டாக்டர் ராதாலெட்சுமி செந்தில் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ள வீடியோக்களிலிருந்து ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் சரியான பதிலைத் தந்து பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் பார்க்கலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணைய வழி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்புங்கள். மேலும், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேள்விகளையும் சேர்த்தனுப்பி வையுங்கள்.
பாக்ஸ் மேட்டர்:
அன்பான ஆசிரியர்களே, ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி தொடர் விழிப்புணர்வு நிகழ்விற்கு தாங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. தங்களது பள்ளிக் குழந்தைகளும் நிகழ்ச்சியைப் பார்த்திட ஏற்பாடு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சுகாதார தொடர் நிகழ்வில் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பல பயனுள்ள சுகாதார ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில், கடந்த வாரம் ‘பள்ளியில் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பள்ளியை சுத்தமாக வைத்திருத்தல், பள்ளியில் உணவு உண்ணும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்த சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த சுகாதார செயல்பாடுகளை தங்களது பள்ளிச் சூழலிலும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் பின்பற்றிட ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டீர்களா? அப்படியாக ஏதேனும் சுகாதார செயல்பாடுகளை முன்னெடுத்திருந்தால் அது பற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதேபோல், தங்கள் பள்ளியிலுள்ள சுகாதார நிலையில் எவ்வகையான மாற்றம் தேவை என்று நீங்கள் நினைத்தாலும் அதனையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT