Published : 02 Nov 2025 12:09 AM
Last Updated : 02 Nov 2025 12:09 AM
சென்னை: பள்ளிக் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா (DBSI)' பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் சேர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதில் கிராமாலயா தொண்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
‘கோவிட்’ வைரஸ் தொற்றுப் பரவலின்போது நாம் அனைவருமே சில சுகாதாரப் பழக்கங்களை முறையாகக் கடைப்பிடித்தோம். அதில் ஒன்று ‘கைகளைக் கழுவுதல்.’ தன் சுத்தத்தின் முதல்படியான கை கழுவும் பழக்கத்தை தற்போது பலரும் தொடராமல் விட்டுவிட்டோம். கை கழுவுதலின் மூலமாக, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டுஆகியவற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
`டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா'வின் ‘சுத்தம் சுகாதாரம்’ திட்ட வழிகாட்டுதலின்படி, 20 விநாடிகளுக்கு நம் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் நோக்கில், 17 வாரங்களுக்கு குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணர்வுத் தொடர் வரும் வரும் 5-ம் தேதி (புதன்கிழமை) முதல் வெளிவரவுள்ளது.
இந்த சிறப்புப் பக்கத்தில் சுகாதார விளக்கப் படங்கள், குறுக்கெழுத்துப் போட்டி, வண்ணம் தீட்டுதல், பரிசுக்கான போட்டிக் கேள்விகள் ஆகியவை இடம்பெற உள்ளன. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முதல் 100 மாணவர்களுக்கு வாரந்தோறும் பரிசுகள் வழங்கப்படும்.
பெற்றோர், ஆசிரியர்கள் கவனத்துக்கு... - பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை சுவையான விளையாட்டுகளின் மூலமாக கொண்டுசெல்ல உதவும் இந்த சுகாதார செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் குழந்தைகளுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி, இந்தப் பக்கத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் இந்த தொடரை வைத்து, இந்த திட்டத்தைப் பின்பற்ற தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
இந்த லிங்கின் மூலமாக சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வுப் தொடர் பகுதி - 3 பக்கத்தைப் பார்க்கலாம். அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லி, பரிசினை வெல்லுங்கள்.
https://www.hindutamil.in/other/suththam_sugaatharam.php?week=3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT