Last Updated : 24 Sep, 2025 10:37 PM

 

Published : 24 Sep 2025 10:37 PM
Last Updated : 24 Sep 2025 10:37 PM

இந்திய திறன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்: ஓர் அனுபவ பகிர்வு | தமிழ்நாடு திறன் போட்டிகள்

என் பெயர் ஹரிஹரன். நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவன். தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றேன். என் அப்பா ஒரு சைக்கிள் மெக்கானிக். எளிய சூழ்நிலையில் வளர்ந்தாலும், சிறு வயதிலிருந்தே எனக்கு வரையும் கலையின் மீது பேரார்வம் இருந்தது. பார்த்ததை அப்படியே வரையும் அளவுக்கு என் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டேன்.

முதல் முதலாக என் பெரியப்பாவை வரைந்ததில் ஆரம்பித்த என் பயணம், இன்று உலக அரங்கில் என் பெயரை உயர்த்தியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு நம்பிக்கையாக இருந்தது என் திறமை மட்டுமே. அந்த நேரத்தில் தான், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் தமிழ்நாடு திறன் போட்டிகள் பற்றி அறிந்தேன்.

உடனே பதிவு செய்து “Painting and Decoration” பிரிவில் பங்கேற்றேன். பயிற்சி, பயண செலவு, போக்குவரத்து - அனைத்தையும் அரசே பார்த்துக் கொண்டது. தமிழ்நாடு அளவிலான சுற்றுகளில் வெற்றி பெற்று, 2024-இல் டெல்லியில் நடந்த இந்திய திறன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். அதுவே எனது வாழ்க்கையின் திருப்புமுனை. அதன் பின், 2024-இல் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடந்த உலக திறன் போட்டியில் பங்கேற்று, என் திறமையை உலகம் அறியும் வாய்ப்பைப் பெற்றேன்.

இன்று ஒரு சாதாரண கிராமத்தில் இருந்த நான், தமிழ்நாடு - இந்தியா - உலகம் என மூன்று நிலைகளிலும் என் திறமையால் என் வாழ்க்கையை மாற்றி இருக்கிறேன். திறமை இருந்தால் போதும், அதை உலகிற்கு காட்டுவதற்கு தகுந்த மேடை அளிக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் TNSkill மீது இருக்கிறது.

அந்த வாய்ப்பை எனக்குத் தந்த இந்த திட்டத்திற்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். நீங்களும் தமிழ்நாடு திறன் போட்டியில் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கும் உலகத்திறன் போட்டியில் கலந்துகொள்ள இந்த இணையதளத்தில் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ பதிவு செய்யவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x