Published : 06 Aug 2025 12:37 AM
Last Updated : 06 Aug 2025 12:37 AM

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பங்கேற்கும் சிறப்பு விவாதம்: நாளை நடைபெறுகிறது | ‘சிங்கா 60’

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத்​ திரு​விழாவையொட்டி “சிங்​கப்​பூர்​-இந்​தியா இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள்” தொடர்​பான சிறப்பு விவாத நிகழ்ச்சி நாளை (வி​யாழக்​கிழமை) நடை​பெறுகிறது. இதில் மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலைத்திரு​விழாவை 10 நாட்​கள் கோலாகல​மாக நடத்தி வரு​கின்​றன.

பல்​சுவை நிகழ்ச்​சிகள் நிறைந்த இந்த திரு​விழா ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் நடை​பெற்று வரு​கிறது. அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை​யில் ஓவிய-சிற்​பக் கண்​காட்​சி​யும், தி.நகர் தியாக​ராய சாலை​யில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்​டலில் (ஸ்​கை) ஆகஸ்ட் 10-ம் தேதி வரை​யில் சிங்​கப்​பூர் உணவு திரு​விழா​வும் நடை​பெறுகின்​றன.

இந்​திய திரைப்​படங்​களில் சிங்​கப்​பூர் எவ்​வாறு சித்​தி​கரிக்​கப்​படு​கிறது என்​பதை மையப்​படுத்​தும் வகை​யில் ‘ஸ்​கீரின் அண்ட் சிட்​டி’ என்ற 2 நாள் சிறப்பு நிகழ்ச்சி ராயப்​பேட்டை எக்​ஸ்​பிரஸ் அவென்​யூ​வில் உள்ள பிவிஆர் தியேட்​டரில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் நடிகர்​கள் ஜெய், நடிகர் சிவா, நிதின் சத்​யா, பிரேம்ஜி நடித்த ‘சென்னை 600 028’ படம் திரை​யிடப்​பட்​டது. அதன் தொடர்ச்​சி​யாக அந்த தியேட்​டரில் நேற்று மாலை நடிகர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், நடிகை ஜெயப்​பிரதா ஆகியோர் நடித்த ‘நினைத்​தாலே இனிக்​கும்’ படம் திரை​யிடப்​பட்​டது. சிங்​கப்​பூரில் உள்ள முக்​கிய இடங்​கள், வாழ்க்கை முறை, பொழுது​போக்கு அம்​சங்​கள் இடம்​பெற்​றிருக்​கும் அப்​படத்தை பொது​மக்​கள் உற்​ச​மாக​மாகக் கண்​டுரசித்​தனர்.

‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

‘சிங்கா 60’ கலை​விழா​வின் ஆறாவது நாள் நிகழ்ச்​சி​யாக இன்று (புதன்​கிழமை) காலை 11 மணிக்கு அடை​யாறு பத்​ம​நாபா நகர் 5-வது தெரு​வில் அமைந்​துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் “ஆசிய கலாச்​சா​ரங்​களில் ராமாயணம்” என்ற தலைப்​பில் சிங்​கப்​பூரைச் சேர்ந்த இசை, நடனக்​ கலைஞர் அரவிந்த் குமார​சாமி கலை சொற்​பொழிவு ஆற்​றுகிறார். நாளை (வி​யாழக்​கிழமை) ) பிற்​பகல் 3 மணிக்கு ‘இண்​டியா கனெக்ட் சிங்​கப்​பூர் எடிசன்’ என்ற தலைப்​பிலான சிறப்பு விவாத நிகழ்ச்சி கிண்​டி​யில் உள்ள ஹோட்​டல் ஐடிசி கிராண்ட் சோழா​வில் நடை​பெறுகிறது. இந்​நிகழ்ச்​சி​யில், இந்​தி​யா-சிங்​கப்​பூர் நாடு​கள் இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படு​கிறது. இதில், ஆசிய ஆராய்ச்​சிக்​கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மது​பானி, மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன், சிங்​கப்​பூர், பிரான்​ஸ் நாடு​களுக்​கான முன்​னாள்​ இந்​தி​ய தூதர்​ ஜாவத்​ அஷ்ரப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x