Published : 26 Mar 2025 06:35 PM
Last Updated : 26 Mar 2025 06:35 PM

ரூ.2 லட்சம் வரை உடனடி கடன்: தமிழ்நாட்டிலும் இப்போது ‘விவா மணி’ கிரெடிட் லைன் சேவை!

புதுமையான கடன் வழங்கும் நிறுவனமான ‘விவா மணி’ (Viva Money) தமிழகத்தில் தனது நிறுவன செயல்பாட்டினை தொடங்கியுள்ளது. இந்தியாவில் குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில் நான்காவது மாநிலமாக தமிழகத்திலும் அதிகாரபூர்வமாக தனது பணியை தொடங்கி உள்ளது. இதன் மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்நிறுவன சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் பகிர்ந்த தகவல்: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இருந்து கடன் வேண்டி அதிக அளவிலான விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்தது. ஆனால், அங்கு எங்களது தொழில்நுட்ப ரீதியான இயக்கம் இல்லாததால் அவற்றை நிராகரிக்க வேண்டியிருந்தது. இப்போது தமிழகத்தில் வசிப்பவர்கள் எளிதாக கிரெடிட் லைனுக்கு விண்ணப்பித்து உடனடி ஒப்புதலை பெறலாம் என ‘விவா மணி’-யின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் டோன்சென்கோ கூறியுள்ளார். இந்நிறுவனம், தனது சேவையை தொடங்கிய முதல் மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தில் 5,000 கிரெடிட் லைன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“வேலைவாய்ப்பு, அதிக அளவில் வேலை/தொழில் செய்து வரும் மக்கள், ஊதியம், பரவலான இணையதள சேவை பயன்பாடு போன்ற முக்கிய காரணங்களால் தமிழகத்தில் எங்கள் நிறுவனத்தை தொடங்க வேண்டுமென்ற முடிவை எடுக்க செய்தது. ‘விவா மணி’ குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் பேசும் புலமை கொண்டவர்கள். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்கும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்” என ஜார்ஜ் டோன்சென்கோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் சிறந்த கடன் செயலிகளில் ஒன்றாக ‘விவா மணி’ இணைந்துள்ளது. நிதி சார்ந்த சேவைகளை மொபைல் செயலி மூலம் இந்நிறுவனம் வழங்குகிறது. விவா மணி நிறுவனத்தின் கடன் செயலி இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக நிறுவனத்தின் மாதாந்திர கடன் விநியோகத்தில் 50 சதவீத பங்கை கொண்டுள்ள குஜராத், மகாராஷ்டிராவில் இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2023 டிசம்பரில் ‘விவா மணி’ கிரெடிட் லைன் அம்சத்தை அறிமுகம் செய்தது. 51 நாட்கள் வரை கிரேஸ் பீரியட் வழங்குவது இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித்தேவையை எளிதாக கையாள முடியும். வாடிக்கையார்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையில் இதில் கிரெடிட் லிமிட் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பயனர்களுக்கு கடன் வரம்பை உயர்த்தும் சிறப்பு திட்டமும் உள்ளது.

இந்த நிறுவனத்தின் கிரெடிட் லைன் சேவை தொடங்கியது முதல் இதுவரை 7.70 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இது அனைத்தும் இந்தியாவில் அது செயல்பட்டு வரும் மாநிலங்களில் இருந்து மட்டும் பெற்றவை. இதில் சுமார் 26,000 பயனர்கள் ஆக்டிவாக உள்ளனர். அவர்கள் விவா மணி-யின் கிரெடிட் லைன் சேவை மூலம் பயன் பெற்று வருகின்றனர். ரூ.190 கோடியை இந்த நிறுவனம் விநோயோகித்துள்ளது. இந்தியாவில் கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிக நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

வரும் ஆகஸ்ட் (2025) மாதத்துக்குள் நாடு முழுவதும் கிரெடிட் லைன் சேவையை அதிக அளவிலான பயனர்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விவா மணி இயங்கி வருகிறது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனம் ரூ.15,500 மில்லியனை கடனாக விநியோகிக்க வேண்டுமென்ற இலக்கை கொண்டுள்ளது. மேலும், 1.6 லட்சமாக ஆக்டிவ் பயன்களை எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த வலுவான திட்டமிடலின் மூலம் ‘விவா மணி’ வளர்ச்சி வேகம் கண்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் தளம் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களும் நம்பகத்தன்மை மற்றும் உடனடி கிரெடிட் அக்சஸ் வழங்கும் நிறுவனங்களை தான் நாடுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் சிறந்த கடன் செயலிகளில் ஒன்றாக நிதி சேவை துறையில் புதிய தடத்தை ஏற்படுத்தும் வகையில் பணியை தொடர்கிறது.

தனிப்பட்ட செலவுகள், வணிக தேவைகள் அல்லது அவசர கால தேவைகள் என எதுவாக இருந்தாலும், இந்த கடன் செயலியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயனர்கள் கடன் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x