Published : 25 Feb 2025 06:54 PM
Last Updated : 25 Feb 2025 06:54 PM
சென்னை ஐஐடியில் தொழில்முனைவோர் களம் பெருமிதத்துடன் E-Summit 2025-இன் முக்கிய நிகழ்வான ஸ்டார்ட்அப் எக்ஸ்போவை மார்ச் 2, 2025 அன்று நடத்துகிறது.
தென் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்அப் கண்காட்சியாக, இந்த நிகழ்வு புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்த ஓர் அபூர்வமான வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல, புதிய தொழில்முனைவோரின் புதுமையான எண்ணங்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களின் சங்கமம்!
இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்டார்ட்அப்கள், தங்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், சமீபத்திய தொழில்நுட்ப சேவைகளையும் மாணவர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளன.
ஏன் கலந்துகொள்ள வேண்டும்?
● வலையமைப்பு மண்டலங்கள் - தொழில்துறை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் தொடர்புகள் விரிவடையும்.
● ஈடு இணையற்ற அனுபவம் - முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடையேஉங்கள் புதிய முயற்சிக்கு தனித்துவமான வெளிச்சம் கிடைக்கும்.
● முதலீட்டு வாய்ப்புகள் - உங்கள் அடுத்த பெரிய யோசனையைதேடும் தலைவர்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக உங்கள் கருத்துக்கள் சென்றடைய செய்யலாம்.
● தயாரிப்பு காட்சிபடுத்துதல் - உங்கள் தயாரிப்பை தலைவர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் முன் வெளியிடுங்கள் மற்றும் விளக்குங்கள்.
● தொழில் பட்டறைமற்றும் குழுக்கள் - சந்தைபோக்குகள் மற்றும் வணிக உத்திகள் பற்றிய நிபுணர்களிடமிருந்து நேரடியாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்டார்ட்அப்பை கண்காட்சி செய்ய வேண்டுமா?
ஸ்டார்ட்அப் எக்ஸ்போவில் விவசாயத்திலிருந்து தொழில்நுட்பம் வரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அங்காடிகள் உள்ளன. உங்கள் ஸ்டார்ட்அப்பிற்கான இடத்தை உறுதிசெய்து, சரியான பார்வையாளர்களிடம் உங்கள் புதுமைகளை கொண்டு செல்லுங்கள்!
தேதி: மார்ச் 2, 2025
இடம்: ஐஐடி மெட்ராஸ் வளாகம்
பதிவு செய்ய: https://esummitiitm.org/events/startup-expo
ஸ்டார்ட்அப்ப இல்லையா?
புதுமைப்பித்தன்மையும் தொழில்முனைவுத் திறமையிலும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்! இ-சம்மிட் 2025ல் கலந்துகொண்டு சென்னை ஐஐடியின் நவீன ஸ்டார்ட்அப் சூழலில் அங்கமாகுங்கள்.
புதுமைகளைகண்டு மகிழுங்கள், பார்வையாளர்களைசந்திக்கவும், தொழில்முனைவோர் உலகில் ஈடுபடவும்!
உடனேபதிவு செய்யுங்கள்: https://esummitiitm.org/events/startup-expo
உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்! இ-சம்மிட் 2025ல் சந்திப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT