Published : 25 Feb 2025 05:12 PM
Last Updated : 25 Feb 2025 05:12 PM
சென்ட்ரல் போர்ட் ஆப் வரி செலுத்துவோருக்கு தங்கள் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்க ஜூன் 30, 2023 வரை டைரக்ட் டாக்ஸஸ் அல்லது CBDT அமைப்பு கால அவகாசம் அளித்திருந்தது. இந்த உரிமைக் கட்டளைக்கு இணங்க செயல்படாதிருப்பது கடுமையான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதால் காலக்கெடுவுக்குப் பிறகும் கூட இதை நிறைவேற்றவேண்டியது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். உங்கள் பான் (PAN) மற்றும் ஆதார் எண்ணை இணைக்காதிருந்தால் விளையக்கூடிய முக்கியமான இடர்பாடுகள் குறித்து உங்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் ஒரு சிறந்த முழுமையான வழிகாட்டியாக இந்தக் கட்டுரை இருக்கும் .
பான் (PAN) மற்றும் ஆதார் எண்களை இணைப்பதன் முக்கியத்துவம்: ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன்பாக பான் (PAN) வழங்கப்பட்ட அனைத்து நபர்களும் தங்களது பான் (PAN) மற்றும் ஆதார் எங்களை இணைப்பது கட்டாயமாகும். பின்வரும் காரணங்களின் அடிப்படையில் இந்த இணைப்பை விரைவில் மேற்கொள்ளவேண்டியது மிக மிக அவசியமாகும்:
● இணக்கம்: வருமான வரிச் சட்டப் பிரிவு 139AA இன் கீழ் PAN மற்றும் ஆதார் எண்களை இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறுவது அபராதம் விதிக்கப்படுவதற்கும் மற்றும் உங்கள் PAN செயலிழக்கப்படச்செய்வதற்கும் வழிவகுக்கும்.
● வரி ஏய்ப்பைத் தடுத்தல்: பான்-ஆதார் எண்களை இணைப்பது கருப்புப் பணப் புழக்கம் மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் அரசாங்கத்திற்கு பெருமளவில் உதவுகிறது. பான்-ஆதார் எண் இணைப்பு அமைப்பானது பல பான்( PAN ) எண்களை வைத்துக் கொண்டு வரி செலுத்துவதை தவிர்க்கும் தனிநபர்களின் முயற்சிகளை தடை செய்து அறவே நீக்குகிறது.
● வருமான வரி வருமான வரிக்கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதி: உங்கள் வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் வருமான வரித் துறையின் இணையதளத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் , உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம்.. ITR சரிபார்ப்பு நடைமுறைகள் ஆதார் சரிபார்ப்பு முறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது, உங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் இது சாத்தியப்படாது.
● அரசு மானியங்களைப் பெறுதல்: பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் மூலமான பலன்களைப் பெற உங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம் உதாரணமாக, நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் LPG எரிவாயுக்கான மானியத்தைப் பெற உங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
● எளிமைப்படுத்தப்பட்ட KYC நடைமுறைகள்: PAN-ஆதார் இணைப்பை நிறுவும் நடைமுறைகள் ஒரு வங்கிக் கணக்கைத் துவங்க , கடனுக்கு விண்ணப்பிக்க அல்லது ஆன்லைன் மார்க்கெட் ப்ளேசஸ் (online marketplaces) களில் அதிகளவு மதிப்பு வாய்ந்த பொருட்களுக்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு சேவைகளுக்கான KYC நடைமுறைகளையும் எளிதாக்குகிறது.
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காதிருப்பதால் ஏற்படும் விளைவுகள்:
CBDT வழிகாட்டுதல்களின் படி, வரையறுக்கப்பட்ட கால அளவிக்குள் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அந்த சம்பந்தப்பட்ட வரி செலுத்தும் நபரின் பான் செயலிழந்துவிடும். அது பின்வரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்:
● வரி செலுத்துவோர் செயல்பாட்டிலிருக்கும் PAN அட்டைகளைப் பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
● தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வருமான வரி கணக்குகளை ஐடி துறை செயல்படுத்தாது அல்லது செயல்பாட்டிலிருக்கும் PAN மூலம் பணத்தைத் திரும்பப் பெற உங்களை அனுமதிக்காது.
● சட்டப் பிரிவு 206AA இன் படி, PAN செயல்பாட்டில் இல்லை என்றால் பொருந்தக்கூடிய TDS அதிக விகிதத்தில் வசூலிக்கப்படும். செயல்பாட்டில் இல்லாத PAN மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் சட்டப் பிரிவு 206CC இன் கீழ் TCS அதிக விகிதத்தில் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்.
● படிவம் 26AS இல் உங்கள் வரி கடப்பாடுகளை ஈடுசெய்ய உதவுவதற்கான TDS/TCS கிரெடிட் வசதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், செயல்பாட்டிலில்லாத PAN கார்டு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் படிவம் 26AS இல் TDS/TCS கிரெடிட் காட்டப்படாது.
● செயல்பாட்டில் இல்லாத PAN கார்டுகளுக்கு TCS/TDS சான்றிதழ்கள் வழங்கப்படாது.
● வரி விதிபிபிர்க்குள்ளாகக் கூடிய உங்கள் வருமானம் விலக்களிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே உள்ளதை அறிவிக்க, வங்கி மற்றும் NBFC FD மற்றும் பிற தகுதியான முதலீடுகளுக்கான வட்டி தொகைகளை சுயமாக வெளிப்படுத்தும் அறிவிப்பு படிவம் 15G/15H ஐ நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். TDS பிடித்தங்களை தவிர்ப்பதற்கான இந்தப் படிவங்களைச் செயல்பாட்டில் இல்லாத PAN மூலம் , சமர்ப்பிக்க முடியாது.
● நிதி ஆவணங்கள் சந்தை பரிவர்த்தனைகளுக்கான ஒரே அடையாள எண் PAN என்பதால், சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI யும் இந்த வழிகாட்டுதல்களை வலியுறுத்தியிருக்கிறது. உங்கள் PAN எண்ணுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், நிதி ஆவணங்களின் சந்தையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலிருந்தும் நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள்.
● பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள செயல்பாட்டிலுள்ள ஒரு PAN அட்டை அவசியம் தேவை. செயல்பாட்டில் இல்லாத PAN எண் பின்வரும் பரிவர்த்தனைகளைச் மேற்கொள்வதில் உங்களைத் தகுதி நீக்கம் செய்யும்:
- ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவது
- டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழங்கப்பெறுவது
- பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தல்
- ஒரு டிமேட் கணக்கைத் துவங்குவது
- வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் ஒரே நாளில் ரூ. 50,000 க்கு மேல் ரொக்கதொகை டெபாசிட் செய்வது.
- NBFCகள், வங்கிகள் அல்லது இதர நிதி நிறுவனங்களில் ரூ. 50,000 க்கு மேல் அல்லது ஒரு நிதியாண்டில் மொத்தத் தொகை ரூ. 5 லட்சத்திற்கு மேல் ஒரு கால வறை வைப்புக்கணக்கை துவங்க.
- ஒரு நிதியாண்டில் மொத்தம் ரூ. 50,000 க்கு மேல் முன் செலுத்தப்பட்ட வங்கி டிராஃப்ட் அல்லது பே ஆர்டர்கள் போன்ற நிதியாவணங்கள் மூலம் தொகை செலுத்துதல் .
- ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதல் அல்லது விற்பனைக்கான பரிவர்த்தனைகள்
- ஒரே நாளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஒரு வங்கி வரைவோலையை ரொக்கம் செலுத்தி வாங்குவது
- ரூ. 10,000 க்கு மேலான தொகைக்கு வங்கி பரிவர்த்தனைகள்.
● பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல் அல்லது மானியங்களைப் பெறுதல் போன்ற பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்கு உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை இரண்டும் அவசியம். உங்கள் பான் செயல்படாத நிலையில் இருந்தால், இத்தகைய அரசு சேவைகளை அணுகுவது சிரமமாக இருக்கும்.
● PAN-ஆதார் இணைப்பு நடைமுறைகளை நீங்கள் நிறைவு செய்யவில்லை என்றால் உங்கள் பழைய PAN கார்டு சேதமடைந்தாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதற்கு பதிலாக ஒரு புதிய PAN கார்டைப் பெறுவது மிகவும் கடினம்.
முடிவுரை: சுருக்கமாக, நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மற்றும் மின்னியல் மூலமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை தொடர்ந்து மேற்கொள்ள விரும்பினால் நீங்கள் வெகு சீக்கிரமாகவே உங்கள் PAN ஐ உங்கள் ஆதார் எண்ணுடன் உடனடியாக இணைக்க வேண்டும் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் அத்தோடு சேர்ந்து ஒரு சில பரிவர்த்தனைகள் மேற்கொள்வது மற்றும் அரசு வழங்கும் மானியங்களை பெறுவதில் நீங்கள் தகுதியிழக்க நேரிடும். இணைப்பதற்கான கால வரையறையை நீங்கள் தவறவிட்டிருந்தாலும் கால தாமதத்திற்கான கட்டணம் ரூ. 1000 தொகையை செலுத்தி மின்னியல் தாக்கல் தளத்தில் உங்கள் PAN மற்றும் ஆதார் எண்களை இணைத்துக்கொள்ளும் வசதி இன்னும் உங்களுக்கு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT