Last Updated : 02 May, 2014 12:40 PM

 

Published : 02 May 2014 12:40 PM
Last Updated : 02 May 2014 12:40 PM

திக்.. திக்.. திக் விஜய் சிங்!

‘பிறன்மனை நோக்காமை பேராண்மை’ என்றார் வள்ளுவர். தமிழ்நாட்டில் வள்ளுவர் சொன்னது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் திக்விஜய் சிங்குக்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை. ‘ஊருக்கெல்லாம் பலன் சொல்லுமாம் பல்லி, கழுநீர்ப் பானையில் விழுமாம் துள்ளி’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கு நல்லதொரு உதாரண புருஷராகிவிட்டார் திக்விஜய் சிங்.

மாநிலங்களவைத் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் அம்ரிதா ராய் என்பவருடன் உள்ள ‘உறவு’ இப்போது அம்பலமாகி வேறு வழியில்லாமல் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார் திக் விஜய் சிங்.

“அம்ரிதா ராய் அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு செய்திருக்கிறார். விவாகரத்து கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், இது எங்களுடைய சொந்த விவகாரம்” என்று பொரிந்து தள்ளுகிறார் திக் விஜய்.

பத்திரிகைகளில் திக் விஜய் சிங்கின் பேட்டி வெளிவராத நாள்களே கிடையாது. பாரதிய ஜனதாவை - அதிலும் நரேந்திர மோடியை - விமர்சித்துப் பேசாவிட்டால் திக் விஜய் சிங்குக்கு பொழுதே போகாது.

சமீபத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த நரேந்திர மோடி தன்னுடைய மனைவியின் பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டு, அவருடைய சொத்து விவரங்கள் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். மோடிக்கு இருக்கும் தகுதிக்குறைவுகளிலேயே இதுதான் மோசமான தகுதிக்குறைவு என்று உரத்த குரலில் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துவிட்டார் திக்விஜய் சிங்.

“தனக்குத் திருமணம் ஆனதையும் மனைவியைப் பிரிந்து வாழ்வதையும் மோடி ஏன் மறைத்தார்? திருமணத்தை மறைத்தது மோசடிக் குற்றம் அல்லவா, மனைவியை வைத்து பாதுகாக்காதவர் நாட்டில் உள்ள பெண்களை எப்படி பாது காப்பார், மனைவியைத் தவிக்க விடுவது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா?” என்றெல்லாம் நிருபர்களி டமும் ட்விட்டரிலும் நீட்டி முழக்கினார். தன்னுடைய இத்தனை நாள்அந்தரங்கம் வெளிப்பட்டது என்றதும் ‘இது என்னுடைய சொந்த வாழ்க்கை’ என்கிறார்.

திக்விஜய் சிங் இப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாள ராக இருக்கிறார். ராகுல் காந்திக்கு இவர்தான் இப்போது அரசியல் ஆசான். இவருடைய பேச்சுத் திறமைக்காகவும் நிர்வாக அனுபவத்துக்காகவும் ராகுல் காந்தி இவரை ஆலோசகராக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த ரகோகர் என்ற சிறிய சமஸ்தானத்தில் அரச குடும்பத்தில் 28.2.1947-ல் பிறந்தவர்தான் திக் விஜய் சிங். இப்போது 67 வயதாகிறது. இந்தூரில் உள்ள டேலி கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்றார். 22 வயதிலேயே ரகோகர் முனிசி பல் சேர்மன் பதவி வகித்தார். 1971-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1977-ல் சட்டப் பேரவை உறுப்பினரானார். 1980-84-ல் அர்ஜுன் சிங் தலைமையிலான மத்தியப்பிரதேச அரசில் அமைச்சராகப் பணியாற்றினார். 1984-ல் ரகோகர் தொகுதியி லிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1985-ல் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

1991-ல் மீண்டும் ரகோகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 1993-ல் மத்தியப் பிரதேச முதலமைச்சரா னார். பத்தாண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருந்தார். அவர் மீது சில ஊழல் குற்றச் சாட்டுகளும் இருக்கின்றன.

நரேந்திர மோடியை மட்டுமல்ல... மாயாவதியைக்கூட மிக மட்டமாக விமர்சித்து ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியவர்தான் திக்விஜய் சிங். மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யின் வனப்பை பொதுமேடையில் விவரித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தவர்.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் போலீஸாரை விட்டு மோடி கண்காணித்தார் என்று - அந்தப் பெண்ணின் தந்தை அதற்கு விளக்கம் அளித்த பிறகுகூட - ஊர் ஊராகப் பேசி பெண்களுக்காகக் குரல் கொடுத்தார்.

திக்விஜய் சிங்குக்கு 4 பெண்கள், ஒரு மகன். மனைவி ஆஷா சிங் கடந்த ஆண்டுதான் இறந்தார். அம்ரிதா ராய் என்ற இளம் பெண்ணுக்குக் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு மனு செய்திருக்கிறார். அவருடன் திக்விஜய் நட்பு கொள்ளஆரம்பித்தார்.

இதைச் சிலர் மோப்பம் பிடித்து, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் இருவரு டைய புகைப்படங்களையும் வெளியிட்டு தகவலைப் பற்றவைத்தனர். அதுதான் இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது.

“பொதுவாழ்க்கை என்று வந்தபிறகு யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது’ என்று மோடிக்கு இவர்தான் அறிவுரை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x