Published : 09 Jul 2015 10:10 AM
Last Updated : 09 Jul 2015 10:10 AM

இணைய களம்: கவனிக்கப்படாத காமினி!

ராதாகிருஷ்ணன்

சிறு குழந்தைகள் கன்னத்தில் இடப்படும் எச்சில் முத்தங்களை விரும்புவதில்லை. எச்சிலற்ற முத்தம் ஒரு கலை!

சி.பி.செந்தில்குமார் ‏

சார், ஆபீஸில் ஹெல்மெட் அலவன்ஸ் உண்டா? நோ. அப்போ ஹெல்மெட் ஃபைன் அலவன்ஸாவது குடுங்க.

விஜயசங்கர் ராமச்சந்திரன்

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், ஒரு ஊழலில் தொடர்புடைய 45 பேர் அடுத்தடுத்து இறந்திருக்கின்றனர் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறுகிறது. யோகா இருந்தும் சம்ஸ்கிருதம் இருந்தும்... நோ பீஸ் ஆஃப் மைண்ட்.

அதிஷா

மெட்ரோல அடிவாங்கிய ஆள் ஸ்டாலினை இரண்டு அடிகூடத் திருப்பி அடிச்சிருக்கலாம். ஆனா, அறிக்கை குடுக்கும்போது ‘ஸ்டாலின் அங்கிள்’ன்ட்டார்!

அட, மரிக்கொழுந்து! அவர் இளைஞரணித் தலைவர்டா. அவரைப் பார்த்தா அங்கிள் மாதிரியா இருக்கு. அடுத்த பர்த்டேவுக்கு ‘அங்கிள்களின் அங்கிளே... ஆல்பர்பஸ் அங்கிளே’னு அஞ்சாநெஞ்சன் ஆதரவு உபிகள் போஸ்டர் அடிக்காம இருக்கணும்!

சுகுணா திவாகர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவரசனின் மரணம். இன்னமும் அந்த ரயில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை கோகுல்ராஜின் கொடூர மரணம் நிரூபித்திருக்கிறது.

சஞ்சய் காந்தி

தமிழ்நாட்டுக்கு 12 ஸ்மார்ட் நகரங்களுக்கு அனுமதியாம். இதற்கான மத்திய அரசின் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மந்திரிகூடக் கலந்துக்கலையாம். அப்படியிருந்தும் 12 ஸ்மார்ட் நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம். பார்த்திங்களா தமிழ்நாட்டின் மீதான எங்கள் பாசத்தையும் பெருந்தன்மையையும் என்று தமிழிசை அக்கா போகுமிடமெல்லாம் விளம்பரம் வாசிக்கிறாங்க.

யக்கோவ்... இந்தத் திட்டம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு. சென்னையில் வசிக்கும், வெங்கய்ய நாயுடுவின் மருமகன் தமிழ்நாட்டின் மிகப் பெரும் ரியல் எஸ்டேட் அதிபர். கூட்டிக் கழிச்சிப் பாருங்க... கணக்கு சரியா வரும். பாசமாம்... பெருந்தன்மையாம்... புண்ணாக்காம்!

ராவணன் கார்ட்டூன்ஸ்

படத்தின் இடது புறம் இருப்பவர் பூனம் ராவத். வலது புறம் இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த காமினி. கடந்த மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 275 ரன்கள் சேர்த்தனர். இது ஒரு உலக சாதனை. அந்தப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதுகுறித்த செய்தி எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவரவில்லை. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 264 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.2.64 லட்சத்துக்கான காசோலை மைதானத்திலேயே வழங்கப் பட்டது. 192 ரன்கள், அதுவும் டெஸ்ட் போட்டி யில் எடுத்த காமினிக்கு 192 ரூபாயாவது வழங்கப்பட்டதா என்று தெரியவில்லை. வாழ்க பிசிசிஐ மற்றும் நமது மாநிலத்தைச் சேர்ந்த அதன் முன்னாள் தலைவர்!

விமலாதித்த மாமல்லன்

கொஞ்சம் அரசியல் தெரிந்து, கொஞ்சம் சீனியர் டெல்லி இதழாளர்களிடம் பழக்கமும் இருந்தால் - ஜெயமோகன் # ஒயர் பிஞ்சி ஒரு வாரமாச்சு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x