Published : 18 Jun 2015 10:21 AM
Last Updated : 18 Jun 2015 10:21 AM
சுரேஷ் கண்ணன்
ஒரு விடலைப் பருவத்துச் சிறுவன், எப்போது இளைஞனின் உலகில் நுழைகிறான், எந்தக் கணத்தில் அந்தப் பரிமாண வளர்ச்சி நிகழ்கிறது என்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியாததைப் போலவே நிகழ்கிறது, ஓர் ஆருயிர் நண்பன் பகைவனாகும் தருணமும்.
*
*
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
ஆன்மிகமும் திரையுலகமும் பிரிக்க முடியாதது: மதுரை ஆதீனம்
# சாமி... உங்களுக்கும் இஸ்க்...இஸ்க்… என்றா கேட்கிறது.
*
ஆதிரா ஆனந்த்
ஆர்.கே. நகர் ஏரியாவுக்குள் பைக்கில் சுற்றுவது கூட ஏதோ சொகுசு கப்பலில் பயணிப்பது போலுள்ளது. ஒரு வேகத்தடை கூட இல்லை… லால் சலாம்.
*
வடக்குப்பட்டி ராமசாமி
சல்மான், லலித், கொத்ரோச்சி, ஆண்டர்சன் போன்ற கையறு நிலையில் இருந்த அடித்தட்டு மக்களைத் தூக்கிவிடுவதே அரசின் தலையாய கடம!
*
நெல்ஸன் சேவியர்
அம்மாவென நினைத்து, அப்பாவின் மார்புக் காம்புகளை எச்சில்படுத்துகிற குழந்தையின் கடும்பசி தருணங்களி்ல், ஆணுக்கு ஏன் காம்புகள் என்கிற அறிவார்ந்த கேள்வி அடிபட்டுப்போகிறது.
*
வெங்கடேஷ் ஆறுமுகம்
யாதும் ஊரேன்னு நினைச்சா நீ ரியல் தமிழன்… யாதும் சென்னைதான்னு நினைச்சா நீ ரியல் எஸ்டேட் தமிழன்.
*
சரவணன் சந்திரன்
சரியாக 1990-ம் ஆண்டு. பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் அவர்கள். அதில் ஒரு நண்பர் மற்ற இரு நண்பர்களை அயனாவரத்தில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருக்கிறார். அழைத்த அந்த நண்பர் வாங்கித் தரப்போகும் சிகரெட்டுக்கும் டீக்கும் ஆசைப்பட்டு, அந்தக் கூட்டத்துக்கு இரு நண்பர்களும் போயிருக் கின்றனர்.
வட இந்தியாவில் இருந்து யாரோ சில தலைவர்கள் வந்திருப்பதாகச் சொல்லி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைத்திருந்திருக் கின்றனர். மொத்தமே கூட்டத்தில் 25 தலைகள் கூடத் தாண்டாது. வட இந்தியத் தலைவர்கள், இந்த நண்பர்கள் இருவரையும் அவர்கள் வழக்கப்படி கட்டியணைத்து வரவேற்று தங்களோடு இணைந்து பணியாற்றச் சொல்லியிருக் கிறார்கள். 25 பேர் கூட இல்லாத கூட்டத்துக்குத் தலைவராக இருப்பவர்கள் எங்கே நமக்கு வழிகாட்டப் போகிறார்கள் என்று நினைத்து, அதில் ஒரு நண்பர் கூட்டத்தை விட்டும் சிகரெட்டின் ஆசையையும் விட்டுவிட்டும் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார். இன்னொரு நண்பர் கூட்டத்திலேயே இருப்பதாகச் சொல்லி இருந்து விட்டார்.
கூட்டத்திலிருந்து வெளியேறிய நண்பர் இன்று அக்கட்சியில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர்களை அழைத்த நண்பர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட நண்பர் இதோ இந்தக் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஒரு சிகரெட்டுக்காக. அதுசரி. கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் யாரென்று நீங்கள் கேட்கவில்லையே? வாஜ்பாய் மற்றும் அத்வானி.
*
ஷான் கருப்புசாமி
மோடிக்கு ஒரு உதவின்னு கேட்டதும் எந்த மோடின்னு விசாரிக்காம சுஷ்மா உணர்ச்சிவசப்பட்டுட்டாங்களோ?
*
வந்தியத்தேவன்
இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலை பேசியிலிருந்து அழிப்பதற்கு ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT