Published : 07 May 2015 12:34 PM
Last Updated : 07 May 2015 12:34 PM
கோகுல கிருஷ்ணன் போஜன்:
ஆகவே, இன்று முதல் சல்மான் கான் ‘மக்களின் சூப்பர் ஸ்டார்’என அழைக்கப்படுவார்!
கிருஷ்ண குமார் அப்பு:
சல்மான் கைது: இதயமே நொறுங்கியதுபோல உள்ளது - ஹன்சிகா # நடைபாதையில படுக்குற விதி வாய்ச்சிருந்தா கை கால் நொறுங்கிருக்கும். என்ன பண்றது?
ஆழி செந்தில்நாதன்:
ஹே ஏழைஸ்! நீங்க ஏன் சல்மான் காருக்குக் கீழே போனீங்க?
கண்ணன்:
இரண்டு யானைகள் மோதிக்கொள்ளும்போது அழிவது புற்கள்தான்; இரண்டு யானைகள் காதல் புரியும்போதும் அழிவது புற்கள்தான்!
ஷான் கருப்புசாமி:
ஒரு வழக்கை எவ்வளவு மெதுவாக நடத்த முடியும் என்பதைத் தண்டனைக்கு முன்னும், எவ்வளவு விரைவாக நடத்த முடியும் என்பதைத் தண்டனைக்குப் பிறகும் அறிந்துகொள்ள இன்னொரு வாய்ப்பு!
நையாண்டி நாரதர்:
தமிழக மக்களுக்காக விஸ்வரூபம் எடுப்பேன் - ஸ்டாலின் # வேணாம்ணே... அந்தப் படம் பாத்துட்டேன்… புதுசா எதாவது எடுங்க. ஆனா, உங்க புள்ளய வெச்சி எடுத்துடாதீங்க!
எம்.டி.முத்துக்குமாரசாமி:
படத்தில், கே.பாலசந்தர், “பிரமாதம், என்னமா நடிச்சுருக்கான் பாரு” என்று கமலைப் புல்லரித்துப் பாராட்டும்போதெல்லாம் அவர் நம் அசோகமித்திரனைப் போல ஏதாவது உள்குத்து வைத்துப் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT