Published : 12 May 2015 10:37 AM
Last Updated : 12 May 2015 10:37 AM
‘‘சார்!’’
- அட்டெண்டரின் குரல் என்னைக் கலைத்தது. ‘‘உங்களைப் பார்க்க உங்க நண்பர் பழனி வந்துருக்காரு. ரிசப்ஷன்ல காத்திட்டிருக்காரு’’ என்றார்.
‘‘அஞ்சு நிமிஷம் காத்திருக்கச் சொல்லுப்பா’’ என்றேன்.
பழனி என் நெருங்கிய நண்பன். வேலையில் கெட்டிக்காரன். ஒரே இடத் தில் தொடர்ந்து வேலை செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற கொள்கை உடையவன். அதனா லேயே அடுத்தடுத்து வேறு கம் பெனிகளுக்கு மாறிக்கொண்டிருப் பான். எந்த நிறுவனத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் நீடித்து வேலை செய்ததில்லை.
ஆறு மாதங்களுக்கு முன்புகூட இங்குதான் வேலை செய்து கொண்டிருந்தான். நான்காயிரம் ரூபாய் அதிகம் கிடைத்ததால் வேறொரு நிறுவனத்துக்கு மாறிவிட் டான். என்னையும் வந்துவிடுமாறுதான் கூறினான். நான் மறுத்துவிட்டேன்.
நானும் அவனுடன் சென்றிருந்தால் என் சம்பளமும் உயர்ந்திருக்குமே என்று இப்போது யோசிக்கிறேன். ஒரே இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற என் கொள்கை தவறோ என்று இப்போது எனக்கு படுகிறது.
இப்படி யோசித்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரிய வில்லை. அடடா, பழனி வந்ததையே மறந்துவிட்டோமே. ரிசப்ஷனுக்கு ஓடினேன்.
பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘‘கொஞ்சம் வெளியில வாயேன். உன்கிட்ட பேசணும்’’ என்றான்.
அவனுடன் பேசியதில், அவன் வேலையை விட்டுவிட்டது தெரிந்தது.
‘‘வேலை போயி ரெண்டு மாச மாச்சு. நான் முன்ன மாதிரி இல்லடா. கம்பெனி கம்பெனியா மாறி மாறி வேலை செய்யறது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது. ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாரு! உனக்குத் தெரிஞ்ச நல்ல கம்பெனி எதுலயாவது வேலை இருந்தா சொல்லுடா” என்று கூறி விட்டு சென்றான்.
அதன் பிறகு, வேலையில் கவனம் செல்லவில்லை. எம்.டி.யிடம் வேலை கேட்டுப் பார்க்கலாமா என்றும் யோசித்தேன்.
திடீரென எம்.டி.யே வெளியே வந் தார். ‘‘என்ன சந்திரா. உன் நண்பன் வந்துட்டுப் போன மாதிரி இருந்துச்சே? என்ன விஷயமாம்?’’ என்றார்.
‘‘அது ஒண்ணுமில்ல சார். அவ னுக்கு வேலை போயிடுச்சாம். அதான். எங்காவது வேலை வாங்கி தரச் சொல்லிட்டுப் போறான். பதினஞ்சு வரு ஷமா ஒரே கம்பெனியே கதியா கிடக்கிற எனக்குத் தெரிஞ்ச ஒரே நல்ல கம்பெனி நம்ம கம்பெனிதான். அதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன்’’ என்றேன்.
இதைக் கேட்டு சிரித்த எம்.டி., ‘‘அவன் அடிக்கடி கம்பெனி மாறுகிற வன். அவன் மேல எனக்கு நல்ல அபிப் பிராயம் கிடையாது. ஆனாலும் இத்தனை வருஷமா இந்த கம்பெனி க்காக உழைக்கிற உன்னை மதிக் கிறேன். நீ சொன்னதுக்காக அவ னுக்கு வேலை கொடுக்கிறேன்’’ என்றார்.
ஒரே இடத்தில் விசுவாசமாக வேலை செய்வதன் பயன் எனக்கு அப்போது இன்னும் நன்றாகப் புரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT