Published : 15 Apr 2015 12:43 PM
Last Updated : 15 Apr 2015 12:43 PM

வாட்ஸ்அப் வறுவல்

வாட்ஸ்அப் குரூப்பை விட்டு வெளியேற நினைக்கும் உறுப்பினருக்கும், அதன் அட்மினுக்கும் இடையே ‘தேவர் மகன்’ பட ஸ்டைலில் நடக்கும் உரையாடல்

சிவாஜி (அட்மின்) : என்னப்பு குரூப்ப விட்டு விலகறியாம்ல?

கமல் (உறுப்பினர்) : ஆமாங்க ஐயா.... எனக்கு பிடிக்கல.

சிவாஜி : என்னப்பா பிடிக்கல?

கமல் : மொக்க நியூஸா போடுறாங்கையா... தாங்க முடியல!

சிவாஜி : அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்?

கமல் : இல்லிங்கய்யா... என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா.

சிவாஜி : ஆமாம்பா சேல்ஸுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட்னு தெரியாம பைய தூக்கிட்டு போனவங்கதான நம்ம பயக...

கமல் : ஐயா போட்ட நியூஸையே திரும்பத் திரும்பத் போடுறாங்க..

சிவாஜி : அவங்க என்ன பண்ணுவாங்க? இருக்கிறததான போடுவாங்க. ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க... நீ புதுசா போடு அப்பு!

கமல்: குருப்ல 31 பேர் இருக்காங்க. ஒரு செய்தி போட்டா புடிச்சிருக்கா, புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கிறாங்க.

சிவாஜி : எப்படி காட்டுவாங்க? ‘வாட்ஸ் அப்’னு கேள்விபட்ட உடனே அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி, பயன்படுத்தத் தெரியாம பார்த்துகிட்டு இருக்கிறவங்கதான நம்ம பயக. நீ சொல்லிக் கொடு. அவங்க மெதுவாதான் போடுவாங்க.

கமல் : மெதுவானா எப்ப ஐயா? அதுக்குள்ள வாட்ஸ் அப்பே காணாம போயிடும்.

சிவாஜி: போகட்டுமே... வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம். அது இல்லனா வேற ஒண்ணு. ஆனா விதை...? வாட்ஸ் அப் போட்டதுதான? உங்கள நம்பித்தான குரூப்ப ஆரம்பிச்சேன்? நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு?

கமல்: இல்லிங்க ஐயா...பீல் பண்ணாதீங்க. நான் இருக்கேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x