Published : 25 Aug 2025 04:05 PM
Last Updated : 25 Aug 2025 04:05 PM
கார்பரேஷன் மைதானம்
பெசன்ட் நகர்
மத்தியானம் ஒரு மணி.
பத்து, பன்னண்டு Food delivery வாலிபர்கள். Lunch time மகாநாடு. சிலர் மோட்டார்பைக்கோட pillion ல உட்கார்ந்துண்டு. அவங்களோட seat ல ஹெல்மட். வெய்யில்ல வண்டி ஓட்டின சோர்வு. சிலர் கையில சிகரட்.
“வீரவேலு எங்க தாராந்து பூட்டான்? பத்து நாளா காணோம்?”
“வேற ஜோனுக்கு கடாசிட்டாங்க?”
“புச்சா வடக்கத்திக்காரன் ஒத்தன ஜோனல் மேனேஜரா போட்ருக்காங்க, டெலிவரி டீம் ஆளுங்கள மானாவாரியா மாத்திட்ருக்கான்னு வேலு பொலம்பிண்ட்ருந்தாப்போல…”
“ஒனக்கு வெசயம் தெரியாதா?! அவங்க கம்பெனி மோட்டார் பைக் டெலிவரிலேந்து drone delivery க்கு போவப் போறாங்களாம். “Hanumar Drone Services” ன்னு புச்சா கம்பெனி ஒண்ணு போட்ருக்காங்கலாம். பைக் delivery ஆளுங்கள நீங்கள்ளாம் இனிமே வேண்டாம், நிப்பாட்டிக்கங்கன்னு சொல்ட்டாங்க.”
“வீரவேலு மாதிரி ஆளுங்க எப்டி EMI கட்டுவானுங்க?”
“கம்பெனிங்களுக்கு அதப்பத்தி இன்னா அக்கறை? வீரவேலு கூட அவனோட பளய ஜோனல் மேனேஜரண்ட இத கேட்டானாம். அவுரு, “வீரவேலு, எல்லாம் மாறப் போவுது, நீ பைக்க வித்துரு, வர துட்டுல drone வாங்கி எங்க கிட்ட மாச வாடகைக்கு விடு. வாடகை பணத்துல பேங்க்குக்கு EMI கட்டு”ன்னு தெனாவட்டா சொல்லியிருக்கிறாரு.”
“இதுநாள் வரைக்கும் ஆட்டோகாரங்கதான் Mint ல சேட்டுங்க கிட்ட ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டுவாங்க. Delivery கம்பெனிகாரங்க நம்ம கிட்ட drone ஐ வாடகைக்கு எடுத்து ஓட்டறது புச்சா இருக்கு!”
“ஏம்பா, நம்ம பொளப்பே பத்து வருசமாதான. அதுக்கு முன்னாடி பசிச்சா ஊட்ல திம்பாங்க, இல்ல ஓட்டலுக்கு போய் திம்பாங்க. இப்போதான இஸ்டப்பட்ட ஓட்டல்லேந்து டிபன் வர வளிச்சு நம்ம டெலிவரி பண்ணி சாப்டற பளக்கம்…”
“அதெல்லாம் சரி, இப்போ நம்ம flat ங்கள்ள டெலிவரி பண்ணச்சே இரண்டாம் மாடி, நாலாம் மாடின்னு போய் பாத்து கதவை தட்டி குடுக்கறோம். இந்த drone ங்க வந்துச்சுன்னா எப்டி டெலிவரி?”
“Drone ல அனுப்பற டிபன் டப்பாங்களுக்கு நம்பர் வெச்ச பூட்டு போடுவாங்களாம். Flat ங்களுக்கு அனுப்பச்சே மொட்டை மாடில இறக்குவா்ஙகளாம், பில்டிங் வாட்ச்மேனுங்களோட மொபைலுக்கு OTP மாதிரி பூட்ட தெறக்க code அனுப்புவாங்களாம். வாட்ச்மேனுங்களுக்கு டெலிவரி பண்ணதுக்கு கமிசன். நேர அவனவன் பேங்க் அக்கௌன்டுக்கு! வாட்ச்மேனுங்களுக்கு வாழ்வு! லட்டு மாதிரி ஒக்காந்த இடத்துல துட்டு! அவுனுங்களுக்கு வாழ்வுதான்!”
“நீ என்ன இந்த ட்ரோனுங்க வெசயத்த வெலாவாரியா தெரிஞ்சு வெச்சினிருக்க?! நீயுமே ஒன் பைக்க குடுத்துட்டு அவங்களோட போயிரலாம்னா….?”
“சமயத்துல இந்த நச நசன்னு மள, பாடாவதி போலீஸ்காரங்க தொல்லை, உடாம ட்ராபிக்கு, சில பேஜாரான கஸ்டமருங்களப் பாத்தா எனக்குமே அப்படி தோனுது. ஆனா சிலப்போ டெலிவரி பண்ணச்சே நல்ல டிப்ஸ் கிடைக்கும். அது போயிரும் இப்பொ. அந்த துட்டு கெடைக்காது….”
“Flat ங்களுக்கு வாச்மேன் வெச்சு டெலிவரி ஐடியா பண்ணிட்டாங்க. தனி வூடுங்களுக்கு இன்னா செய்யப் போவறாங்க? அவங்கங்க இந்த drone லேந்து டிபனை எடுத்து கிட்டு drone ஐ ஒடனே பறக்க உடலேன்னா?”
“நல்ல கேள்வி கேட்ட. சிலருங்க இப்போ flat ட்டுங்கள்ள லிஃப்டுல அவங்க மாடிக்கு போய்ட்டு லிஃப்ட் கதவை சரியா சாத்தலேன்னா லிஃப்ட் அங்கயே தங்கிருமில்ல! Drone கம்பெனி ஆளுங்க கில்லாடிங்க டெலிவரி ஆயி அஞ்சு நிமிசத்துல drone அ ரிலீஸ் பண்ணலேன்னா க்ரெடிட் கார்டுல waiting charge போட்ருவாங்களாம்…”
“சும்மா சொல்ல கூடாது. இவனுங்க சரியான கில்லாடிங்க! அது சரி, நீ அந்த கம்பெனியோட போவர்தானா என் கையில சொல்லு. நானும் ஒரு வேளை…”
^^^^
Hanumar Drone Services
Operations Center
துரைப்பாக்கம்
Operations Center ஓட entrance ல கீழ்க்கண்ட logo போட்ட banner.
Morning 11 am
“Chief Drone Traffic controller” final interview.
“Mr. Alphonse, பல well-qualified candidates ஐ இன்டர்வ்யூ பண்ணியிருக்கோம். உங்களைப் போல சிலருக்கு Air Force Air Traffic Control operations experience இருக்கு, வேற சிலருக்கு Civil Air Traffic control operations experience இருக்கு. What, in your opinion, are critical to flawless operation…?”
“Gentlemen, I think Air Traffic control க்கு ‘Positional awareness’ ங்கற sense ரொம்ப முக்கியம். One must be aware of one’s own flight path, right of way rules, possibility of impending interference from others occupying the same space, ability to take evasive action to avoid collision… I have run the Ambala Air Force Station, the most forward Air Force station in the country and one of the nation’s busiest; both during conflict and peace times.
“Mr. Alphonse, நீங்க இந்த position ஓட முக்கிய challenge எ exact ஆ summarize பண்ணியிருக்கேங்க. ஒங்க life லேந்து ஏதாவது relevant experience ஐ highlight பண்ண…”
“Gentlemen, நான் ஹை ஸ்கூல்ல படிக்கச்சே T. Nagar ல குடியிருந்தோம். அங்க உஸ்மான் ரோட்ல ‘Somasundaram grounds’ ன்னு ஒரு playground. ஞாயித்திக்கிழமை அன்னிக்கு கார்த்தாலை ஒன்பது மணிலேந்து சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் non-stop ஆ கிரிகெட் மேட்ச்சுகள். ஒரே சமயத்துல ஏழெட்டு மேட்ச்சுகள் போயிண்டுருக்கும்.
சில ‘கவர் பால்’ ன்னு சொல்லற டென்னிஸ் பால் மேட்ச். More senior cricketers, First Division players, one or two Ranji Trophy level players கிரிகெட் பால் வெச்சுண்டு net practice பண்ணுவாங்க, அதுக்கப்பறம் மேட்ச்சும் ஆடுவாங்க.
நான் ஒரு டீமுக்கு விக்கட் கீப்பர். என்னோட முதுகுக்கு பின்னாடியே இன்னொறு மேட்ச்சோட விக்கட் கீப்பர். டென்னிஸ் பந்துகள், கிரிகெட் பந்துகள் இங்கயும் அங்கயும் பறக்கும். If you not develop an instinct to keep track of all these flying objects you could get seriously hurt. Many have been. I was never. சொல்லப் போனா Air Force ல Ambala position open ஆகச்சே whenI mentioned this experience even they were suitably impressed with this real life experience…”
“Thank you Mr. Alphonse. It is unique indeed. Please give us a few minutes to discuss...”
Just as Alphonse got up to leave the room he paused. He looked at the members of the interview panel and said: “Gentlemen, I would dearly love to be selected for this position. But at the risk of losing this exciting opportunity I must say this – Hanumar Drone Services is not an appropriate name. Hanumar was a great figure who took the whole Sanjeevi hill in order to save Lakshmana. I agree that the choice of Hanumar is cute. Very cute. But I am afraid you will be maligning a greatly beloved figure. In my mind it is ok for a pharmacy chain to use the image of Hanumar carrying Sanjeevi hill in order to depict delivery-by-drone of life saving medicines; but it is disrespectful to use this imagery to depict drone delivery of மசால் தோசை from a மைலாப்பூர் hotel or வடகரி from வடபழனி eatery.”
He snapped his heels in a military ‘attention’ and without any regret or looking back Alphonse walked out briskly. Just like an Air Force officer.
(Note: The company took this to heart and quickly changed the name to “Garuda Drone Services”. Today Alphonse is the Chief Drone Traffic Controller of GDS).
^^
ஒரு மாசம் முன்னாடி
ரங்கநகர்
ஶ்ரீரங்கம்
வேதா ஆத்து ஜமாபந்தி மும்முரமா போயிண்டிருந்துது.
1 மணி தபால்ல ஒரு கவர் வந்துது. LIC ஜகன்நாதன் மாமா கிட்டேந்து.
கவருக்குள்ள Times of India paper லேந்து எடுத்த கீழ்க்கண்ட cutting. சின்ன மஞ்சள் கலர் sticky note ஒண்ணுல:
“R/V you’ll find this of interest! – J”
ன்னு Rangachari/Veda ங்கறதை “R/V” ன்னும் Jagannathan ங்கறதை “J”ன்னும் மாமா குறிச்சிருந்தார்.
Walmart, in partnership with Wing,
the drone delivery company owned by Google parent Alphabet, currently offered service from 18 stores in the Dallas area. By next summer, the program was set to expand to 100 Walmart locations across Atlanta, Charlotte, Houston, Orlando, and Tampa in Florida, reports AP.
Unlike traditional delivery services, where a single person may deliver a truckload of packages, drones typically carried just one small order per trip.
Wing's drones could handle packages weighing up to 1 kg and could travel as far as 20 kilometers round trip, and be monitored by a single pilot overseeing up to 32 drones, reported AP.
^^
(கதாசிரியர் தொடர்கிறார்)
CEO Madhavachar of the Indian food delivery company TATKAL FOODS announced that it is planning to pilot a drone delivery service under “Hanumar” brand.
வேதாக்கு இதைப் படிச்சு ஆச்சர்யம். சிரிச்சுண்டா.
“யார்டேந்து கடுதாசி? ஒனக்குள்ளயே சிரிச்சுக்கற!” ன்னு சித்தியம்மா கேட்டார்.
வேதா சமாஜாரத்தை சொன்னா.
விசாலம் மாமி “எங்காத்து கோபால் ஒரு தரம் கல்கத்தாலேந்து ட்ரெயின்ல ஆந்திரா கிட்ட வரச்சே திடீர்னு புயல். பிரளயம் மாதிரி மழை. ரயில்வே தண்டவாளம் அரிச்சு போய் இரண்டு நாள் ட்ரெயின் நகரல. அப்போ ட்ரெயின்ல இருந்தவாளுக்கு ஹெலிகாப்டர்ல வேளா வேளக்கு தூத்தம், சாப்பாடு பொட்டலம் போட்டா. எங்காத்து கோபால் மாதிரி சிலர் ட்ரெயின் மேல ஏறி நின்னுண்டு இந்த பொட்டலங்களை இறக்கி வினியோகம் பண்ணினா. இந்த ஹனுமார் கம்பெனிக்காரா தினமே இப்படி பண்ணப் போறாளா?!”ன்னு வியந்தா.
அடுத்த தெரு மன்னி “இவர் கூட சொல்லியிருக்கார். அரியலூர் ரயில் விபத்துல பலத்த அடி பட்டு கஷ்டப்பட்டவாளை ஹெலிகாப்டர்ல ஏத்திண்டு ஆஸ்பத்திரிக்கு போனான்னு. விவஸ்தையே இல்லாம இருக்கே. எதுக்குதான் பரவுன்னு இல்லாம ஆயிடுத்து. ஒண்ணுமே புரியலை வேதா…”
வேதாவோட ஓற்படி ஜனகம் “ஏன் மன்னி, மழை பெய்ஞா இந்த பறக்கர மிஷின்கள் கொண்டு வர டிபன், காபி தொப்பமா போயிடாதோ? சைக்கிள்ளயோ, மோட்டார பைக்குகள்ளயோ வந்தா அவா மழைக்கு எங்கயாவது ஒதுங்கிண்டு அப்பறம் வருவாளே…”
விசாலம் மாமி “ஜனகம் சொன்னதும் எனக்குமே இப்போ மோட்டார் பைக்குல டிபன் கொண்டு போய் தர ஆட்கள் என்ன பண்ணப்போறாளோ? அவா பொழப்பு என்ன ஆகப்போறதோ?”
வேதா “UBER வந்ததுலேந்து ஆட்டோக்காராளோட லாபநஷ்டம் அடிபட்ட மாதிரிதான். கொஞ்ச நாளைக்கு இவா கஷ்டப்படத்தான் போறா.”
‘ஏங்காணும்’ கல்யாணி மாமி “எங்காத்துல இந்த மாதிரி பிளேன்ல சாப்பாடு வந்து இறங்கித்துன்னா எனக்கு மானக் கேடா இருக்கும். அப்படி என்ன பறப்பு, சபலம்னு புரியலையே?”
அடுத்த தெரு மன்னி “எனக்கென்னமோ இது வஜனத்துல சொல்லற மாதிரி சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்னு படறது”ன்னா.
வேதா “அந்த காலங்கள்ள பொண்டாட்டி பிரசவத்துக்கு பொறந்தாத்துக்கு போனா புருஷா கிளப்புல சாப்பிட வேண்டின நிர்பந்தம். அப்பறம் அந்த ருசி கண்டுண்டு பொண்டாட்டி ஊர்லேந்து வந்தப்பறம் அவளையும் அழச்சுண்டு கிளப்புல சாப்பறதுன்னு ஆச்சு…”
சித்தியம்மா “எனக்கென்னமோ சமய சந்தர்ப்பம்னு ஒண்ணு இருக்குன்னு படறது. ‘அன்பில்’ சேஷையங்கார் இப்போ இருந்துருந்தாரனா பொஹு சந்தோஷப் பட்டுண்டிருப்பார். ஹோட்டல் பண்டங்கள், வித விதமா சாப்பிட திருவுள்ளம். அவர் சதா சர்வ காலமும் ‘திருவானைக்காவல்ல மாது ஐயர் கிளப்புல பஜ்ஜி நன்னாயிருக்கும், மலைக்கோட்டை சின்ன கடை வீதில மைசூர் போண்டா நன்னாயிருக்கும்னு வேளைக்கு வேளை நொட்டை விட்டுண்டு சாப்பட ஆசை. அவரோட பார்யாள் காலமியிட்டா. அவருக்கு வாய்க்கு பிடிச்ச மாதிரி பண்ணி போட யாருமில்லை. அவர் மாதிரி ஒரு சில கூட்டாளிகளுக்கு இது சமயத்துல வசதியாயிருக்குமோ என்னமோ.”
வேதா “நம்ம எல்லாருமே இந்த புது Drone டெலிவரி கம்பெனியை பத்தி இது அனாவஸ்யமோன்னு யோஜிக்கச்சே ஒரு சிலருக்கு ஒரு வேளை அவஸ்யமோன்று சித்திம்மா வேற மாதிரி யோஜிக்கறா!”
ஜனகம் “இந்த Drone கம்பனில மாதவாச்சார்னு யாரையோ சொன்னேளே மன்னி, பேசாம தன்னோட பேரை ‘த்ரோணாச்சார்’ னு மாத்திண்டா…!”
வாசல்ல மோட்டார் பைக் டெலிவரி வண்டி போட்ட சத்தத்துல சித்தியம்மா “ஜனகம், ஒனக்கு கூட ஹாஸ்யமா பேசத் தெரிஞ்சுடுத்து”ன்னு சின்ன குரல்ல மெச்சினது யாருக்கும் காதுல விழல.
^^^
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT