Published : 01 Jul 2025 09:45 PM
Last Updated : 01 Jul 2025 09:45 PM
என்ன இது A, B, C, D என்ற ஒரு கதையின் டைட்டில் என்று தோன்கிறது இல்லையா?!
ஒரு காரணத்துடன்தான்.
^^
அமெரிக்கால பிறந்த “முதல் தலைமுறை இந்திய - அமெரிக்கர்”களுக்கு பரவலாக தங்களுடைய மனதில் ஒரு confusion.
“நான் யார்?” என்று எப்பவுமே மனதுக்குள் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்.
English-ல் “Identity Crisis” என்று சொல்கிறார்கள்.
இந்த மாதிரி குடும்பங்களில்:
வீட்டில் இட்லி, வெளியில் burger
வீட்டில் சரிகம, வெளியில் a cappella
வீட்டில் கையால், வெளியில் knife & fork
வீட்டில் வெறும் கால், வெளியில் shoes
மொத்தமாக… சொல்லப் போனால்…
வீட்டில் இந்திய கலாசாரம், வெளியில் அமெரிக்க கலாசாரம்.
வெவ்வேறு வீடுகளில் இந்த இந்திய, அமெரிக்க கலாசாரம் கலவை விகிதம் மட்டும் மாறும். ஆனால் கட்டாயமாக கலவை உண்டு, confusion ம் உண்டு.
உதாரணமாக:
Vivek Ramaswamy 2024 presidential primary-ல ஓடும் போது அவர் தன்னுடைய வீட்டுக்குள்:
அமெரிக்க கலாசாரம் படி coat, suit போட்டுக் கொண்டு…
ஆனால் இந்திய கலாசாரம் படி காலுக்கு சாக்ஸ் அணியாமல் வெறும் காலுடன்...
இந்த போட்டோவை பத்திரிகைகளில் போட்டு அவர் “போலி அமெரிக்கன்”, “Third World Uncle”னு internet-ல troll செய்து நையாண்டி!
^^^^
“திருவிளையாடல்” சினிமாவில் சிவபெருமான் ஔவையாரிடம் “என்னைப் பற்றி ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்பத்தி பாடு” என்றதும் ஒளவையார் கீழ்க்கண்டவாறு பாடியதாக கவிஞர் கண்ணதாசன் அவருடைய அற்புதமான கற்பனையில் ஒரு பாட்டை எண்ணிக்கை வரிசையில் இயற்றியிருந்தார்.
“ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்…”
இந்த மாதிரியில் இந்திய அமெரிக்கர்கள் தங்களைப் பற்றி தாங்களே நகைச்சுவைக்காக A, B, C, D என்கிற கிரமத்தில் X, Y, Z வரை ஒரு verse சொல்லுவார்கள். எனக்கு முழுவதும் தெரியாது.
தெரிந்த வரைக்கும்…
American
Born
Confused
Desi
Emigrated
From
Gujarat;
Home
In
Jersey;
X
Y
Z
நிற்க.
^^^^
ஒங்களுக்கு Zohran Kwame Mamdani என்பவர் யாரென்று தெரியுமா?
நியூயார்க் மேயர் பதவிக்கு தேர்தல் நவம்பரில் நடக்கப் போகிறது. Democratic கட்சி தங்களுடைய கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க முதல் வட்டப் போட்டி சமீபத்தில் நடத்தினர். அமெரிக்கா தேர்தல் பாஷையில் “Primary”.
Democratic primary-யில் மாஜி கவர்னர் (Chief minister) Andrew Cuomo உட்பட பல வேட்பாளர்கள். அதில் ஒருவர்தான் Zohran Kwame Mamdani.
சமீபத்தில் நடந்த முதல் வட்டப் போட்டியில் Zoltan Mamdani வெற்றி பெற்றார்.
அடுத்து இவர் Republican கட்சி வேட்பாளரை நவம்பர் தேர்தலில் தோற்க்கடித்தால் அவர் நான்கு வருஷ காலம் மேயர் பதவியில் இருப்பார். அதற்க்கு நல்ல வாய்ப்பு உண்டு.
^^^^
அவரைப் பற்றிய சில விவரங்கள்:
First name: Zohran
முஸ்லிம் name
Middle name: Kwame
African name
Last name: Mamdani
Shia முஸ்லிம் name
Age: 34
Born in: Uganda
Early childhood: South Africa
Migrated to: New York, at age 7
Citizenship: Became American in 2018
Father: Gujarati Shia Muslim
Mother: Padma Bhushan Mira Nair, Punjabi Hindu
Languages Zohran knows:
Hindi
Urdu
Bengali
Spanish
Married to: Syrian-American
சாதாரணமாக இந்தியாவிலிருந்து நேராக அமெரிக்காவிற்கு வந்து, ஒரே மதம், ஒரே ஜாதியான கணவன் - மனைவி குடும்பத்தில் பிறந்த “முதல் முறை இந்திய-அமெரிக்க” பிரஜைகளுக்கே “நான் யார்” என்கிற சஞ்சலம்.
இவருடைய bio data வைப் படித்தால் இவருக்கு இந்த சஞ்சலம் அபரிமிதமாக ஏற்படும் என்று என் எண்ணம்.
இவர் முதல் சுற்றில் வென்றதும் இவரைப் பற்றி புகழ்ந்து சிலர், இகழ்ந்து சிலர் பேச்சு. President Trump முதல் பலர் இவரை நையாண்டி செய்தனர்.
“2018-ல் அமெரிக்க பிரஜை ஆன ஒரு மனிதன் எப்படி அமெரிக்காவின் தலை சிறந்த நகரத்தை ஆள முடியும்?”
“இவர் பிரஜா உரிமை மட்டும் பெற்றதால் அமெரிக்கன் ஆகி விடமுடியுமா? கீழே இருக்கும் போட்டோவை பாருங்கள், Zoltan கத்தி, முள்கம்பி உபயோகிக்காமல் வெறும் கையால் சாப்பிடுகிறார். மேயர் ஆகி விட்டார் என்றால் Zoltan உலகப் பிரசித்த New York restaurant-களில் dinner-க்குப் போனால் கையால் சாப்பிடுவாரா? அவரை தேர்தலில் நவம்பர் மாத தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து அமெரிக்காவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஒரு கோஷ்டி.
“லண்டனில் டாக்ஸி ட்ரைவர்களுக்கு கார் ஓட்டத் நெரிந்தால் மட்டும் போதாது. GPS வைத்துக் கொண்டு ஒரு விலாசத்துக்கு ஓட்டி சென்றால் போதாது. சற்று சரித்திரமும் தெரிய வேண்டும் என்று நிபந்தனை. Zoltan-க்கு நியூயார்க் சரித்திரம் பரிட்சை வைக்க வேண்டும்” என்று கோரிக்கை!
^^
Zoltan Mamdani-யின் முதல் சுற்று வெற்றியில் என்ன சிறப்பு என்றால்...
நியூயார்க்கில் 8 million people. அதில் 1.3 million Jews. கிட்டத்தட்ட 1 million Muslims.
யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதாரணமாகவே ஆகாது. வெட்டு பழி, குத்து பழி. போறாத குறைக்கு இப்போது Israel-Iran பலத்த அடிதடி.
Israel ஒரு Jewish country.
Iran ஒரு Shia Muslim country.
Zoltan ஒரு Shia Muslim என்று ஏற்கெனவே சொன்னோம்.
பொதுவாக New York ஒரு Jewish-strong city என்று பரவலாக ஒரு எண்ணம்.
சாதாரணமாக எலக்ஷன்களில் “First past the post” என்ற முறையில் வெற்றி தோல்வி தீர்மானிப்பார்கள். மூன்று வேட்பாளர்கள் பங்கெடுத்து ஆளுக்கு தலா 35%, 34%, 31% வோட்டுகள் வாங்கி இருந்தால் 35% வாங்கினவர் வெற்றி என்று முடிவு.
ஆனால் 35% வாங்கினவர் உண்மையில் மெஜாரிட்டி (50%) வாங்கவில்ல. அதனால் இந்த “First past the post’ விதம் ஜனநாயகத்துக்கு சற்று இழுக்குதான். இந்த பங்கத்தை நிவர்த்திக்க சில தேசங்களில் “Ranked Choice” என்கிற voting system கடைபிடிக்கிறார்கள்.
இந்த முறையில் தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டுச்சீட்டில் “first choice இவர், second choice இவர், third choice இவர்” என்று ஐந்து வேட்பாளர்கள் வரை குறிக்கலாம்.
ஓட்டுகளை எண்ணும் போது எத்த வாக்காளருக்குமே் 50% கிடைக்கவில்லை என்றால் கடைசியாக வந்த candidate-ஐ eliminate பண்ணிடுவார்கள்.
அந்த eliminated candidate-க்கு வாக்களித்த மக்களுடைய second choice candidate யார் யாரோ அவர்களுக்கெல்லாம் இந்த வோட்டுகளை கூட்டுவார்கள்.
உதாரணமாக, ஒரு தேர்தலில் Tom, Dick, Harry, You, Me என்று ஐந்து வேட்பாளர்கள். முதலாக ஓட்டுகளை எண்ணும் போது யாருக்குமே 50% கிடைக்கவில்லை. Me என்ற candidate தான் கடைசி.
Me-ஐ eliminate செய்து eliminated candidate-ன் ஓட்டுச்சீட்டில் second choice Tom-ன்னு 2 பேர், second choice Dick-ன்னு 8 பேர், second choice Harry-ன்னு 20 பேர், second choice You என்று 40 பேர் குறித்திருந்தால் ஏற்கெனவே Tom, Dick, Harry, You ன் ஓட்டுகளை முறையே 2, 8, 20, 40 என்று அதிகப்படுத்துவார்கள். அப்படி செய்தும் யாருக்குமே 50% கிடைக்கவில்லை என்றால் இப்போது கடைசியா இருக்கும் candidate-ஐ eliminateபண்ணிவிட்டு அந்த வாக்காளர்களின் third choice candidate யார் யாரோ அவர்களுக்கெல்லாம் இந்த வோட்டுகளை வினியோகம் செய்வார்கள்.
இப்படி பல முறை செய்து கடைசியில் இரண்டே பேர் இருக்கும்போது கட்டாயமாக ஒருவருக்கு 50% கிடைக்கும். அவருக்குத்தான் வெற்றி.
இதுதான் Ranked Choice system!
இந்த முறை New York Democratic கட்சி primary-ல அதிசயம் என்னவென்றால் Brad Lander-ன்னு ஒரு Jewish candidate. அவரும் Muslim candidate Zohran Mamdani-யும் ஒரு வித கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார்கள். They both asked their voters that if their first choice was Brad Lander then to mark their ballot choosing Zohran Mamdani as their second choice; and vice versa!
Jew-Muslim unity!
Result after first counting;
Mamdani: 44%
Cuomo: 33%
Lander: 11%
இதர பலர்: 12%
On election night itself it became clear that even though Zoltan didn’t get 50% that subsequently when Lander will be eliminated and the second choice of his votes were factored in that Zoltan would have reached the necessary 50% threshold.
So on election night itself before such tabulations were completed second place finisher Cuomo conceded that Zoltan will be the winner.
^^^^
Frank Sinatra பாடி பிரசித்தி பெற்ற “New York, New York” என்ற பாட்டின் முக்கிய வரி:
If you make it in New York, you can make it anywhere!
இது Zoltan Mamdani-க்கு பொருத்தமான பாட்டு.
^^^^
ரங்கநகர்
ஶ்ரீரங்கம்
LIC ஜகன்நாதன் மாமா கொண்டு வந்திருந்த பத்திரிகையில் இந்த தேர்தல் விவரங்களை படித்து ஶ்ரீரங்கம் ரங்கநகர் வேதா வீட்டு ஜமாபந்தியில் Zoltan-ன் வாழ்க்கை சரிதம் அடிபட்டதாக கேள்வி.
“ஏங்காணும்” கல்யாணி மாமி… ஏன் மாமி, சென்னைக்கு வடக்கத்திக்காரன் IAS ஆள் Corporation Commissioner-ஆ வந்தா அவருக்கு அமிஞ்சிகரை எங்க, ஆலந்தூர் எங்கேன்னு தெரியுமா? எப்படி வேலை பண்ண முடியும்?
விசாலம் மாமி... ஆமாம் மாமி, அன்னிக்கு bank-ல இருந்த கிளார்க்குகள் யாருக்கும் தமிழ் தெரியலையே? Passbook-ல entry போடத் தெரிஞ்சா போறுமா? கஸ்டமர்கள் பாடு திண்டாட்டம்.
வேதா… இந்த 33-34 வயசு பையனுக்கு அவ்வளவு பெரிய ஊரை நடத்த சான்ஸ் தருவா போல இருக்கே! அமெரிக்கா ரொம்ப முற்போக்கான நாடுதான்.
சித்தியம்மா… ஆனாலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாம யூதரும் முஸ்லீமும் கூட்டணி போட்டிருக்காளே அந்த ஊர்ல, ரொம்ப மெச்சணும்.
இப்படியாக....
^^^^^^^^^
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT