Last Updated : 26 Aug, 2014 07:18 PM

 

Published : 26 Aug 2014 07:18 PM
Last Updated : 26 Aug 2014 07:18 PM

பேஸ்புக் பகிர்வு: வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம்- கடலூர் காவல்துறையின் கனிவான வேண்டுகோள்

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், இதுதான் நமக்கு மிகவும் பரிச்சியமான வாசகம். ஆனால், கடலூர் புறநகர் காவல்துறையினர் வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம்; குற்றம் நடப்பதை தடுப்போம் என வித்தியாசமான ஒரு பிரச்சாரத்தை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து செய்துள்ளனர்.

கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த நகை, பணம் திருடு போவதை விட தடயம் இல்லாததால் அதை கண்டுபிடிக்க முடியாமல் போவது மிகவும் வேதனையானது என விளக்கமளித்த காவல்துறையினர், பல பவுன் நகை களவு போகாமல் தடுக்க ஒரு பவுன் நகைக்கான பணத்தை செலவு செய்து கேமரா வைக்கலாமே என யோசனை தெரிவித்துள்ளனர். சிந்தித்து செயல்படுங்கள் என மக்களின் சிந்தனையையும் தூண்டி விட்டுள்ளனர் இந்த வித்தியாச பிரச்சாரத்தின் மூலம்.

பல்வேறு வழக்குகளில் சிசிடிவி பதிவின் மூலம் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்த அடிப்படையில், வீட்டுக்கு வீடு கேமரா பொருத்துங்கள் என்ற வேண்டுகோள் சிலருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம்.

வேறு சிலரோ, செக்யூரிட்டி, சிசிடிவி கேமரா, பீரோக்களில் அலார்ம், சுற்றுச் சுவர்களில் கண்ணாடி துண்டுகள், பெண்கள் கைப்பைகளில் பெப்பர் ஸ்பிரே என தற்காப்பு ஏற்பாடுகள் விரிந்து கொண்டே செல்கிறதே. பொதுமக்களை காப்பதற்குதான் காவல்துறை எனவும் கேள்வி எழுப்பலாம்.

எது எப்படியோ, பேஸ்புக்கில் போகிற போக்கில் கவர்ந்திழுத்த இந்த துண்டு பிரசுரம் வாசிக்க சுவாரஸ்யமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x