Published : 30 Jun 2024 07:49 AM
Last Updated : 30 Jun 2024 07:49 AM

திண்ணை: அருந்ததி ராய்க்கு ‘பென் பின்டர்’ விருது

நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் ஹெரால்டு பின்டர் நினைவாக சர்வதேச அளவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ‘பென் பின்டர்’ விருது 2009இலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது இந்திய ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’, ‘மினிஸ்டரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ ஆகிய நாவல்களையும் 15க்கும் மேற்பட்ட அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும் ராய் எழுதியிருக்கிறார்; ஏற்கெனவே புக்கர் சர்வதேச இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளார்.

சீர் கலை இலக்கிய விருது விழா

சீர் வாசகர் வட்டம் வழங்கும் சீர் கலை இலக்கிய விருது, இலக்கியச் செயல்பாட்டாளர் பொதியவெற்பனுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது விழா இன்று (30.06.24) மாலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் வடகோவைப் பகுதியில் at642 கம்யூனிட்டியில் (பழைய மாருதி திரையரங்கம்) நடைபெறவுள்ளது. சமூகச் செயல்பாட்டாளர் கணகுறிஞ்சி, தத்துவ எழுத்தாளர் ஜமாலன் ஆகியோர் விருதாளரை வாழ்த்திப் பேசவுள்ளனர். விழாவை ஒட்டி நவீன நாடகமும் பறையிசை நிகழ்வும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தொடர்புக்கு: 95663 31195.

ஜெயசீல ஸ்டீபன் நூல்கள் அறிமுக விழா

வரலாற்றாசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் நான்கு ஆங்கில நூல்கள் அறிமுக விழா இன்று (30.06.24) காலை 9.30 மணி முதல் புதுச்சேரி உருளையன்பேட்டை, முல்லை நகர், மூவேந்தர் வீதியில் உள்ள புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தில் நடைபெறவுள்ளது. க.பஞ்சாங்கம், நாகரத்தினம் கிருஷ்ணா, சு.ஆ.வேங்கிடசுப்புராய நாயகர், பா.இரவிக்குமார், புது எழுத்து மனோன்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். தொடர்புக்கு: 94436 22366

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x