Published : 17 Jan 2024 03:37 PM
Last Updated : 17 Jan 2024 03:37 PM
2022 டிச.29: பிரேசிலின் கால் பந்து ஜாம்பவான் ‘பீலே’ என்றழைக்கப்பட்ட எட்சன் அரண்டெஸ் டு நசிமெண்டோ (82) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
2023 ஜன.12: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் (75) உடல் நலக் குறைவால் கால மானார். 7 முறை மக்களவைக்கும், 3 முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஜன.24: இந்திய கட்டிடக் கலையின் சகாப்தம் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் என்கிற பி.வி. தோஷி (95) காலமானார்.
ஜன.31: மத்திய சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷன் (97) காலமானார். மொரார்ஜி தேசாய் அரசில் 1977-79இல் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர்.
பிப்.4: தமிழ், தெலுங்கு உள்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய வாணி ஜெயராம் (77) சென்னையில் காலமானார்.
பிப்.5: பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் (97) உடல் நலக் குறைவால் துபாயில் காலமானார்.
மார்ச் 19: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் பொருளியல் அறிஞருமான பேராசிரியர் எஸ்.நீலகண்டன் (87) காலமானார்.
மார்ச் 28: இனக்குழு இசை, விளிம்புநிலையி லுள்ள மக்கள், பழங்குடி மக்கள், சமுதாயப் படிநிலை வரிசையில் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் இன்னும் பாதுகாத்துவரும் இசையையும் பிற கலை வடிவங்களையும் மரபுகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவரான ஜப்பானின் யோஷிடாகா தெராடா
காலமானார்.
மார்ச் 29: இந்தியாவின் முன்னோடி ஓவியக் கலைஞர்களில் ஒருவரான விவான் சுந்தரம் (79) காலமானார்.
ஏப்.25: பிரபல திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை (86) வயது மூப்பு காரணமாக காலமானார்.
மே 21: திராவிட இயக்கங்கள் பற்றி நூல்கள் எழுதிய பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் (84) காலமானார்.
மே 22: தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.
மே 29: இந்திய இயற்பியல் துறையின் பேராளுமையாகத் திகழ்ந்த பேராசிரியர் ஜி.ராஜசேகரன் (87) காலமானார்.
ஜூன் 19: புகழ்பெற்ற சமூகவியலாளரும் பேராசிரியருமான இம்தியாஸ் அகமது (83) உடல்நலக் குறைவால் காலமானார்.
ஜூலை 11: பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மிலன் குந்தேரா (94) வயது மூப்பு காரணமாக பாரீஸில் காலமானார்.
ஜூலை 18: கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) உடல் நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார்.
ஜூலை 27: உடல்நலக் குறைவு காரணமாக ஓவியர் மாருதி (86) புனேயில் காலமானார்.
ஆக.6: உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, பாடுகளை, போராட்டத்தைப் பாடிய மாபெரும் கலைஞர் கத்தர் காலமானார்.
ஆக.9: கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு (85) கோவையில் கால மானார்.
ஆக.15: இந்தியாவில் பொதுக் கழிப்பறைகள் பரவலாக்கம் பெறுவதற்குக் காரணமாக விளங்கிய சமூக சேவகர் பிந்தேஷ்வர் பாடக் (80) காலமானார்.
ஆக.24: ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத நடவடிக்கையைத் தொடங்கிய ‘வாக்னர்’ அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் காலமானார்.
செப்.4: தலைச்சிறந்த மொழிபெயர்ப்பாளரான ஈடித் கிராஸ்மன் (87) காலமானார்.
செப்.8: அரசியல் கேலிச்சித்திர உலகில் மிக முக்கியமானவராகப் போற்றப்பட்ட அஜித் நைனான் (68) மைசூருவில் காலமானார்.
செப்.28: நாட்டின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் (98) வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார்.
நவ.15: சுதந்திரப் போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா (102) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நவ.21: இந்தியாவின் தலைசிறந்த கண் மருத்துவர்களில் ஒருவரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் (83) காலமானார்.
நவ.29: உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸஞ்சர் (100) காலமானார்.
டிசம்பர் 28: தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
மறைந்த முத்துகள்:
டிச. 31, 2022: முன்னாள் போப் பெனடிக்ட் XVI (95), 2005 முதல் 2013 வரை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக இருந்தவர்.
ஜனவரி 4, 2023: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா (45).
ஜனவரி 13: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி. நாகராஜன் (77) காலமானார்.
ஜனவரி 19: இஸ்லாமிய அறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான அப்துல் கனி அசாரி (101), காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அரபி மொழித் துறையின் தலைவராகப் பணி யாற்றியவர்.
ஜனவரி 30: கன்னட எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான டி.வி. திருமலேஷ் (82), ‘அக்ஷயா காவ்யா’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிப்ரவரி 5: இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன், 15 படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிப்ரவரி 19: திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில் சாமி (57) திடீர் மாரடைப்பால் காலமானார்.
ஏப்ரல் 10: நேர்மையான முறையில் தேர்தலை நடத்தியதற்காகப் பெயர்பெற்ற தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா (72) காலமானார்.
ஏப்ரல் 25: சிரோன்மணி அகாலி தளக் கட்சியின் முன்னாள் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95) காலமானார். பஞ்சாப் முதல்வராக இவர் ஐந்து முறை பதவி வகித்தவர்.
மே 3: மே 3: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரான மனோ பாலா (69) காலமானார். 40 திரைப்படங்களையும் 16 தொலைக்காட்சித் தொடர் களையும் இயக்கி யுள்ளார்.
ஜூன் 10: அன்னை மங்கலம் ஐயாசாமி (97) காலமானார். மலேசியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டவர்.
ஆகஸ்ட் 11: கவிஞரும் எழுத்தாளருமான வாய்மைநாதன் (86) காலமானார். மரபுக் கவிதையில் தேர்ந்தவர். மதுரை வீரன் (கவிதை நாடகம்),
தியாகி களப்பால் குப்பு (வாழ்க்கை வரலாறு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
செப்டம்பர் 8: திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். சமீப காலமாகச் சின்னத்திரை நடிகராகவும் புகழ்பெற்றிருந்தார்.
செப்டம்பர் 24: மலையாள இயக்குநரான கே.ஜி. ஜார்ஜ் (77) காலமானார். கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருதையும் மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றவர். இவரது ஏழு படங்கள் சர்வதேசத் திரை விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.
அக்டோபர் 19: மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மிகக் குருவுமான பங்காரு அடிகளார் (82) காலமானார்.
அக்டோபர் 23: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் வீரருமான பிஷன் சிங் பேடி (77) உடல் நலக் குறைவால் டெல்லியில் காலமானார். 1966 முதல் 1979 வரை இந்திய அணியில் விளையாடியவர் இவர்.
நவம்பர் 2: நடிகர் ஜூனியர் பாலையா (70) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நவம்பர் 17: இந்திய வரலாற்று ஆய்வாளரான பி.என். கோஸ்வாமி, 26க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஓவியக் கலை குறித்தவை கணிசமானவை.
நவம்பர் 23: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) கேரள மாநிலம் கொல்லத்தில் காலமானார். 1997-2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர். இவர் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாவார்.
டிசம்பர் 14: தமிழ்த் திரைப்பட இயக்குநரும் மூத்த நடிகருமான ரா.சங்கரன் (92) காலமானார். ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT