Published : 18 Jan 2023 03:41 PM
Last Updated : 18 Jan 2023 03:41 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.19 - 25

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி, சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகப்படும். அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி, சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். ஆயுதங்களை கையாளும் போது கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி, சூரியன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். காரியங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து கடவுளை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். இந்தவாரம் கிரகங்களின் நிலை:

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.19 - 25

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x