Published : 21 Sep 2022 08:01 AM
Last Updated : 21 Sep 2022 08:01 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.22 - 28

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: தனவாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

அஸ்வினி: அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும்.

பரணி: நக்ஷத்ராதிபதி சுக்கிரனின் பாதசார சஞ்சாரத்தால் இன்னல்கள் அகலும். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும்.

கிருத்திகை - 01-ம் பாதம்: திட்டமிட்டபடி அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

***********

ரிஷபம் கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25 -ம் தேதி சுக்கிரன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசியில் இருக்கும் செவ்வாயாலும் திரிகோணத்தில் இருக்கும் கிரகங்களாலும் சுபசெலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். அனைத்து விதத்திலும் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். கலைத்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த காரிய தடை, தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கிருத்திகை - 2, 3, 4 பாதங்கள்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

ரோகினி: அனைத்திலும் இருந்து வந்த தடைகள் அகலும். அனைத்து கிரகங்களுடைய அருமையான அமைப்பில் இருக்கிறீர்கள்.

மிருகசீரிஷம் - 1, 2 பாதங்கள்: சுப விரைய செலவுகள் வந்து சேரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

***********

மிதுனம் கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25- ம் தேதி சுக்கிரன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத்தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்னச்சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனத்தடுமாற்றம் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு அடுத்தவர்களுடைய ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம் - 3, 4 பாதங்கள்: பல தடைகள் விலகும். எதிலும் லாபமான நிலை காணப்படும்.

திருவாதிரை: சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும்.

புனர்பூசம் - 1, 2, 3 பாதங்கள்: தொழிலில் நல்ல மாற்றங்கள் வரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x