Published : 14 Sep 2022 06:43 PM
Last Updated : 14 Sep 2022 06:43 PM
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ராசியை சனி பகவான் அமர்ந்து அருளாட்சி புரிய - பாக்கிய ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தொழிலாளர்கள் ஏதாவது பிரச்சினை இருக்குமானால் அதை முன்னின்று தீர்த்து வைத்து தொழிலை செவ்வனே நடத்திவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம்.
பெண்மணிகள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்: மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும்.
திருவோணம்: நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
அவிட்டம் - 1, 2 பாதங்கள்: மனக் கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
***********
கும்பம் கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17ம் தேதி - சூர்யன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: கேந்திரங்கள் மிகவும் பலமாக இருக்கிறது. தொழில் ஸ்தானம் மிகவும் வலுவாக இருக்கிறது. சுபமாற்றங்கள் வரும். தொழில் - வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள். குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம்.
பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது. அரசியல்வாதிகள் புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்.
அவிட்டம் - 3, 4 பாதங்கள்: கடன் பிரச்சினை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.
சதயம்: சிக்கலான பிரச்சினைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்: எல்லா பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.
***********
மீனம் கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.
இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: ராசிக்கு ஏழாமிடத்திற்கு சூரியன் மாறுகிறார். சாதனைகளை புரிவீர்கள். தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் துரிதமாக வரும்.
வெளி நாடுகளில் வேலை புரிவோர் தாயகத்திற்கு திரும்புவதற்கு முயற்சி செய்தால் இப்போது அது உங்களுக்கு பலிதமாகும். குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.
பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் தான். மாமியார் மருமகள் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்த வருத்தங்கள் நீங்கும். மாணவ மணிகள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சியை இப்போது மேற்கொள்ளலாம்.
பூரட்டாதி - 4 வது பாதம்: எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
உத்திரட்டாதி: பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
ரேவதி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT