Published : 18 Sep 2025 04:58 PM
Last Updated : 18 Sep 2025 04:58 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.18 - 24

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசியில் இருந்த சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் மாற்றம் பெற்று சஞ்சரிக்கிறார். கேந்திரங்கள் மிக பலமாக இருக்கிறது. சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியத்தில் இருந்து வந்த தாமதம் நீங்கி வேகம் எடுக்கும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் வேகம் பெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். பொறுப்புகள் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு: சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.

பூசம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

ஆயில்யம்: இந்த வாரம் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும்.

பரிகாரம்: சந்திரனை வணங்கி வர மன தெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் இருக்க ஐந்தாமிடமும் ஒன்பதாம் இடமும் மிக அனுகூலமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம் பெறும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பங்கு தாரர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.

பூரம்: இந்த வாரம் உதவி கிடைக்கும். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசியில் ராசிநாதன் புதன் ஆட்சி உச்சமாக சஞ்சரிக்கிறார். எடுத்த வேலையில் இருந்த சுணக்கம் விலகும். முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். தொழில் மேன்மை அடைவதற்கான வழிகளைக் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

பரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x