Published : 18 Sep 2025 04:35 PM
Last Updated : 18 Sep 2025 04:35 PM
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார். அனுகூலமான பலன்கள் உண்டாகும். காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் நன்மை நடக்கும். மன சஞ்சலம் நீங்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அரசாங்க ரீதியிலான அனுகூலம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள்.குழந்தைகளால் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மன வலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். வீண் கவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அஸ்வினி: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்வது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.
பரணி: இந்த வாரம் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் பண வரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்க்கிறார். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடைபெறும்.
கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்தி தான் தப்பித்துக்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும்.
பெண்களுக்கு திட்டமிட்டப்படி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
ரோகிணி: இந்த வாரம் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பண வரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.
பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும். கடன் பிரச்சனை தீரும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் ராசியில் குரு அமர - திரிகோணம் மிக பலமாக அமைந்திருக்கிறது. பண வரவு நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்திற்காக கடன் எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்த இடத்தில் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மன சலிப்பும் உண்டாகும்.சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்திடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இளைய சகோதர சகோதரிகளிடம் நிலவி வந்த வருத்தங்கள் நீங்கும். கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.
அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். மேலிடத்தில் இருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு நல்லதாகவே அமையும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கோஷ்டி சண்டையில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.
திருவாதிரை: இந்த வாரம் கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்தில் இருந்து புதிய வாய்ப்பு தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும்.
பரிகாரம்: மதுரை மீனாட்சியை வணங்க வாழ்க்கை வளம் பெறும்.
இந்த வார கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT