Published : 11 Sep 2025 07:32 PM
Last Updated : 11 Sep 2025 07:32 PM
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரக நிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.
பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசியல்துறையினருக்கு அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
அஸ்வினி: இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால், பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ மகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து கூடும். செயல் திறமை அதிகரிக்கும். ராசியை பார்க்கும் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைக்கூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சனியே அலங்கரிப்பதால் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.
வர வேண்டிய பணம் வந்து சேரும். கலைத் துறையினருக்கு புதிய முயற்சி கை கொடுக்கும். மகிழ்ச்சியான நிலை காணப்படும். அரசியல் துறையினருக்கு பிணக்கு நீங்கி ஒன்று சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களுக்கு பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கைக்கூடும்.
ரோகிணி: இந்த வாரம் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். லாபாதிபதி சந்திரன் சஞ்சாரம் நற்பலன்களை தரும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். சனியின் சஞ்சாரம் எதிர்ப்புகளை விலக்கும்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் ராசிநாதன் புதன் நீச நிலையில் இருந்தாலும் அவரது சார பலத்தின் மூலம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கடினமான காரியங்கள் கூட சுலபமாக முடிந்துவிடும். ராசிக்கு ஐந்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்ல படியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான சுபச் செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். அரசியல்துறையினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
திருவாதிரை: இந்த வாரம் குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை புதன்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: கடக ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். ராசிக்கு 8-ல் கிரக கூட்டணி அமைந்திருக்கிறது. விருப்பதிற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடை நீங்கும். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் நீங்கும். குடும்பம் பற்றிய கவலைகள் அகலும். குருவின் பார்வையால் உடல் ஆரோக்கியம் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த மனத் தாங்கல் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற சில வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் மன அமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். சந்திரன் சஞ்சாரம் விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும்.
பூசம்: இந்த வாரம் புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பளு குறையும்.
ஆயில்யம்: இந்த வாரம் திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள்.
பரிகாரம்: ஆதி பரா சக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக அலங்காரம் செய்து கொண்டிருக் கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்ல படியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சில நேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மிகுந்த நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். வெற்றி வாய்ப்பு உண்டாகும். காரிய தடை தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
மகம்: இந்த வாரம் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தாமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள்.
பூரம்: இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ ருத்திர மூர்த்தியை ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு வரும். திடீர் சோர்வு அகலும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாப நஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றற்போல் காரியங்கள் நடக்கலாம். அரசியல்துறையினருக்கு அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பண வரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.
பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மனை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: துலா ராசி அன்பர்களே இந்த வாரம் திரிகோணம் பலமாக இருப்பதால் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்திகூர்மையுடன் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனக் கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். சக ஊழியர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.
சுவாதி: இந்த வாரம் மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். ராசிநாதன் சஞ்சாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
பரிகாரம்: ஸ்ரீ சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.
பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். கலைத்துறையினருக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பண வரத்து இருக்கும்.
யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு மன அமைதி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தின் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.
கேட்டை: இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். ஏதாவது மன கவலை இருக்கும். புதன் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன் கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு புதிய நட்பு கை கொடுக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
அரசியல்துறையினர் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மூலம்: இந்த வாரம் எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மன குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: மகர ராசி அன்பர்களே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாகவே வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது துரிதமாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். கூடுதலாக உழைத்து பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு இதமான சூழ்நிலை காணப்படும்.
மேலிடம் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சக மாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். பயணங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
திருவோணம்: இந்த வாரம் குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண பகவனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் சுபச் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமத போக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக் கவலை, காரிய தாமதம் அகலும்.
கலைத்துறையினர் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்துறையினர் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும்.
சதயம்: இந்த வாரம் மனதில் உற்சாகம் உண்டாகும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும். திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல், மனக் குழப்பம் உண்டாகலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.
பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரரை சனிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: மீன ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும்.
அரசியல்துறையினருக்கு எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உத்திரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தினரிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.
ரேவதி: இந்த வாரம் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. போட்டி, பொறாமை அகலும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT