Published : 13 Aug 2025 04:33 PM
Last Updated : 13 Aug 2025 04:33 PM
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எனினும் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.
அனுஷம்: இந்த வாரம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.
கேட்டை: இந்த வாரம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு உண்டாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
பெண்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
மூலம்: இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT