Published : 16 Jul 2025 08:34 PM
Last Updated : 16 Jul 2025 08:34 PM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 17 - 23

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 17-07-2025 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மன வருத்தத்தை தருவதாக இருக்கலாம்.

பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

திருவோணம்: இந்த வாரம் வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் மேலதிகாரி, சக ஊழியர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலை பளு நீங்கும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 17-07-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் இடமாற்றம் உண்டாகும். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கு வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழு மூச்சாக பாடு படுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

சதயம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கு ஏற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ)- ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 17-07-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ஏதாவது ஒரு வகையில் நன்மை நடைபெறும். மற்றவர்கள் செய்கைகளால் மன வருத்தம் உண்டாகலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின் தங்கிய நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலை தூக்கலாம். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜ நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.

உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது.

உத்திரட்டாதி: இந்த வாரம் எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும்.

ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பண வரத்து வரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன கஷ்டம் தீரும். | இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x