Published : 09 Jul 2025 03:20 PM
Last Updated : 09 Jul 2025 03:20 PM
கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும்.
பூசம்: இந்த வாரம் பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
ஆயில்யம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மன குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் பஞ்சம ஸ்தானம் வலுவாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும். நல்லதா ? கெட்டதா ? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.
பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.
மகம்: இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.
பூரம்: இந்த வாரம் எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்கு வாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதனின் லாப ஸ்தான சஞ்சாரத்தால் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும்.
தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள்.
பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
அஸ்தம்: இந்த வாரம் எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மன பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். | இந்த வாரம் கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT