Published : 25 Jun 2025 02:25 PM
Last Updated : 25 Jun 2025 02:25 PM
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நேரம். அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். சந்திரன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.
கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
திருவோணம்: இந்த வாரம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரிய தடைகள் நீங்கும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ராசியில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தனாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால் பணவரவு இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வு காண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதிய நட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மன வருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும்.
வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்: இந்த வாரம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும், மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நல்ல விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.
குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
உத்திரட்டாதி: இந்த வாரம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
ரேவதி: இந்த வாரம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT