Published : 10 Apr 2025 05:37 PM
Last Updated : 10 Apr 2025 05:37 PM
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும் வாரம். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிக்கொண்டுவர சிறந்த காலகட்டம் இதுவாகும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: நவக்கிரக சுக்கிரனை வணங்க எல்லா பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் புதன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.
அனுஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
கேட்டை: இந்த வாரம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் , சனி - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சினை தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மன உற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மூலம்: இந்த வாரம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூராடம்: இந்த வாரம் மன அமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT