Published : 26 Feb 2025 04:52 PM
Last Updated : 26 Feb 2025 04:52 PM
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன், ராகுஎன வலம் வருகிறார்கள்
பலன் இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம்.
அஸ்வினி: இந்த வாரம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும்.
பரணி: இந்த வாரம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.
க்ருத்திகை: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பஞசம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சனி - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன், ராகுஎன வலம் வருகிறார்கள்
பலன்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்துறையினருக்கு சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
க்ருத்திகை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம்.
ரோகினி: இந்த வாரம் புத்திசாதுரியத்தால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
ம்ருகசீரிஷம்: இந்த வாரம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)கிரகநிலை - ராசியில் செவ்வாய் (வ) - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன், ராகு- அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்
பலன்: இந்த வாரம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.
சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு கையில் காசு புரளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.
ம்ருகசீரிஷம்: இந்த வாரம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.
திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.
புனர்பூசம்: இந்த வாரம் புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். | இந்த வாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT