Published : 19 Feb 2025 04:09 PM
Last Updated : 19 Feb 2025 04:09 PM
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள். கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.
பூசம்: இந்த வாரம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.
ஆயில்யம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அரசியல்வாதிகள் நட்புகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
மகம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
பூரம்: இந்த வாரம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் ஆதாயமடைவர். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
அஸ்தம்: இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | இந்த வாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT