Published : 22 Jan 2025 01:50 PM
Last Updated : 22 Jan 2025 01:50 PM
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன்- பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாற்றம் பெற்று மறைந்தாலும் உச்சம் பெறுவதால் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சுவாதி: இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன்- சுக ஸ்தானத்தில் சுக்ரகின், சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய்ல (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் லாப ஸ்தானம் பலம் பெறுவதால் எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும்.
குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மன வருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்.
விசாகம்: இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன்- தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலம் பெறுவதால் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும்.
பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும்.
மூலம்: இந்த வாரம் எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பூராடம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT