Last Updated : 01 Feb, 2024 02:59 PM

 

Published : 01 Feb 2024 02:59 PM
Last Updated : 01 Feb 2024 02:59 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.1 - 7

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷராசியினரே! இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு உச்சமாக மாறுவது நன்மையை தரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ராசியில் குரு சஞ்சாரம் செய்வதால் புதிய வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சமஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கியஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷபராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவரின் பார்வையால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சுலபமாக சமாளிக்கும் திறமை வந்து சேரும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு இரண்டில் செவ்வாய் பார்வை இருப்பதால் கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு வேகம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கியஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே! நீங்கள் எடுத்த முடிவில் மாறாதிருப்பவர். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி புதன் ராசிக்கு 8ல் இருக்கிறார். ராசியை சுக்கிரன் பார்க்கிறார். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் காணப்படும். அரசியல்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் தாயாரை வணங்கி வர முன் ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x