Last Updated : 14 Apr, 2025 04:50 PM

 

Published : 14 Apr 2025 04:50 PM
Last Updated : 14 Apr 2025 04:50 PM

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு - ஒரு வரியில் பலன்களும் பரிகாரமும்

மேஷம்: மன உறுதியுடன் இலக்கை எட்டிப் பிடிப்பதாகவே மேஷம் ராசியினருக்கு விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அமையும். பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடுங்கள். ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவுங்கள். தென்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற வைப்பதாக ரிஷபம் ராசியினருக்கு விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அமையும். பரிகாரம்: ஸ்ரீகால பைரவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் தீபமேற்றி வழிபடுங்கள். பார்வையற்றோருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். தென்னங்கன்று நட்டு பராமரியுங்கள். நல்லது நடக்கும்.

மிதுனம்: தடைகளைத் தாண்டி சாதிக்க வைப்பதாகவே மிதுனம் ராசியினருக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அமையும். பரிகாரம்: ஸ்ரீவராகி அம்மனை வழிபடுங்கள். ஆதரவற்ற வயதானவர்களுக்கு உணவு, உடையை தானமாக கொடுங்கள். வேப்ப மரக்கன்று நட்டு பராமரியுங்கள். வெற்றியுண்டு.

கடகம்: விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பல சவால்களை கொடுத்து, சாதிக்க வைப்பதாகவே கடகம் ராசியினருக்கு அமையும். பரிகாரம்: ஸ்ரீமதுரை மீனாட்சியம்மனை வழிபடுங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உணவு, உடை கொடுங்கள். புன்னை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

சிம்மம்: சில சிரமங்களைக் கொடுத்தாலும் பலவிதங்களிலும் முன்னேற்றத்தை தேடித் தருவதாகவே சிம்மம் ராசியினருக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அமையும். பரிகாரம்: வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை வணங்குங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். வில்வ மரக்கன்று நட்டு பராமரியுங்கள். நினைப்பது நடக்கும்.

கன்னி: இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நெடுநாள் கனவை நனவாக்குவதாகவே கன்னி ராசியினருக்கு அமையும். பரிகாரம்: பழநி மலை முருகனை வழிபடுங்கள். சாலைப் பணி செய்பவர்களுக்கு எந்த வழியிலாவது உதவுங்கள். நெல்லி மரக்கன்று நட்டு பராமரியுங்கள். நினைத்தது நிறைவேறும்.

துலாம்: விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு துலாம் ராசியினரின் தரத்தை ஒருபடி உயரச் செய்வதாக அமையும். பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை தீபமேற்றி வணங்குங்கள். வாய் பேச முடியாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். செம்பருத்தி செடியை நட்டு பராமரியுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசியினருக்கு இந்த விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அனுபவங்கள் பல தந்து அதன் மூலம் அவர்களைச் சீர்படுத்துவதாக அமையும். பரிகாரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்குங்கள். கோயில் உழவாரப் பணிக்கு உதவுங்கள். மாமரக்கன்று நட்டு பராமரியுங்கள். எல்லாம் இன்பமயமாகும்.

தனுசு: இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, தனுசு ராசியினரை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். காது கேளாதவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வாழை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

மகரம்: சவால்கள் நிறைந்ததாகவும், சாமர்த்தியத்தைக் கற்றுத் தருவதாகவுமே மகரம் ராசியினருக்கு விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அமையும். பரிகாரம்: ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை வழிபடுங்கள். பள்ளிக் கூடங்களை புதுப்பிக்க முடிந்த வரை உதவுங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். முன்னேற்றம் உண்டு.

கும்பம்: இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, முதலில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்தாலும் நிறைவில் பெரும் வெற்றியைத் தருவதாகவே கும்பம் ராசியினருக்கு அமையும். பரிகாரம்: ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். ரத்த தானம் செய்யுங்கள். தென்னை மரக் கன்று நட்டு பராமரியுங்கள். எதிலும் சாதிப்பீர்கள்.

மீனம்: விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு, தடைகளைத் தாண்டி முன்னேற வைப்பதாகவே மீன ராசியினருக்கு அமையும். பரிகாரம்: திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்குங்கள். கிரிவலம் வாருங்கள். உடல் ஊனமுற்றோருக்கு முடிந்த வரை உதவுங்கள். பலாமரக் கன்று நட்டு பராமரியுங்கள். விரும்பியதெல்லாம் நடக்கும்.

12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் முழுமையாகவும் தனித்தனியாகவும் வாசிக்க > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x