Published : 30 Sep 2025 07:18 PM
Last Updated : 30 Sep 2025 07:18 PM
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த மாதம் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன் தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.
அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.
புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொலை தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச் செலவுகள் தான் என்பதை உணருங்கள்.
திருவோணம்: இந்த மாதம் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதில் இருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும் | சந்திராஷ்டம தினங்கள்: அக் 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோ 01, 27, 28 |
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த மாதம் காரிய தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பண நெருக்கடி குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு மனத் துணிவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பல விதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.
சதயம்: இந்த மாதம் நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுப காரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்து சேரும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகருக்கு அருகம் புல் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும் | சந்திராஷ்டம தினங்கள்: அக் 19, 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோ 02, 03, 29, 30 |
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த மாதம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்தி சாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம்.
உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் வீண் பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
உத்திரட்டாதி: இந்த மாதம் பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.
ரேவதி: இந்த மாதம் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பண விஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பண வரத்து இருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் | சந்திராஷ்டம தினங்கள்: அக். 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: அக். 04, 05, 31 |
இந்த மாத கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT