Published : 30 Sep 2025 06:56 PM
Last Updated : 30 Sep 2025 06:56 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வீண் பழி உண்டாகலாம்.

வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். புதிய பதவிகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சுவாதி: இந்த மாதம் தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயம் இது. கலைத் துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

பரிகாரம்: ஸ்ரீ மஹா லக்ஷ்மிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: அக் 10, 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: அக் 19, 20, 21 |

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தன லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.

அனுஷம்: இந்த மாதம் வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேல் அதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

கேட்டை: இந்த மாதம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும் | சந்திராஷ்டம தினங்கள்: அக். 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: அக். 22, 23 |

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கைக்கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

மூலம்: இந்த மாதம் சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவ மணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

பூராடம்: இந்த மாதம் பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். எதை பேசினாலும் அவமானம் என்று இருந்த நிலை மாறும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பரம்பரைச் சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரம் இது.

பரிகாரம்: சிவன் கோவிலை தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: அக் 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: அக் 24, 25, 26 |

இந்த மாத கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x