Last Updated : 02 Apr, 2025 05:01 PM

 

Published : 02 Apr 2025 05:01 PM
Last Updated : 02 Apr 2025 05:01 PM

மகரம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 10-04-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நிதானத்தோடு செயல்பட்டால் நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என்று இருப்பதைக் கொண்டு சிறப்புடன் எளிய வாழ்வு முறையை அமையுடன் விரும்பும் மகர ராசி அன்பர்களே... இந்த மாதம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

பெண்கள் நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பார். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும்.

திருவோணம்: இந்த மாதம் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x