Published : 27 Feb 2025 05:44 PM
Last Updated : 27 Feb 2025 05:44 PM
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் -சுக ஸ்தானத்தில் கேது -பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி -தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
பலன்கள்: எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே! இந்தமாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
திருவாதிரை: பணவரவுகளிலும் திட்டங்களிலும் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். குடும்பத்திற்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT